“ இந்திய அரசியல்ல தேர்தல் ரொம்ப சூடு பிடிச்சிடுச்சு ”
“ம் என்ன ஆச்சு?”
“பாத்துட்டு சும்மா
இருப்பேனா உடனே ஃபையர் ஆபிசுக்கு போன் போட்டுச்சொல்லிட்டேன் இல்ல”
...........................................................................................................................
அமைச்சர்:-“திடீர்னு ஒரு சந்தேகம்பா, தேர்தல் ஆணையம் ஏன் நோட்டா பட்டனுக்கு ஓட்டு கேட்குது அந்த சின்னத்துல யார் நிக்கிறாங்க?”
தொண்டன் :- “அய்யோ அய்யோ அது
யாருக்கும் ஓட்டு இல்லனு, ஓட்டு போடற பட்டன்”
அமைச்சர்:- "அடச்சே, இது தெரியாம நமக்கு கட்சிமாற காசுகொடுத்தாங்களே அவங்க கட்சின்னு நினைச்சு அந்த பட்டனை அமுக்கிட்டேன்"
தொண்டன் :- "வெளிய சொல்லாதீங்க, வெட்ககேடு"
.....................................................................................................................
PLEASE NOTE:- 'NOTA'
........................................................................................................................
"மேடையில ரெண்டு பக்கமும் வாளியில தண்ணீர் எடுத்து வைக்கச்சொல்றீங்களே ஏன் ?"
"அதுவா தலைவர் 'அனல் பறக்க' பேசுவாராம். அப்படி பேசுனா அவர் மேல தண்ணீர் ஊத்தி கூல் செய்ய தான் எடுத்து வைக்கச்சொன்னேன்"
.................................................................................................................................................