இளைஞருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 01, 2014

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

சபதம் எடுப்போம்

எலே இந்தியனே!
எங்கடா உன் வீரம்.
கூட்டமா கத்தினாக்கா
ஓடிடுமா ஊழல் மரம்.
வேரோடு வெட்டினா தான்
விலகுமடா வளர்ந்த மரம்.
ஒவ்வொருவனும் முடிவெடுத்தா
ஒழிச்சிடலாம் இந்த விதை.
கூட்டமா நின்னவனே !
சத்தமாய் கத்தினவனே!
சர்க்காரு ஆளுக்கு -இனி
சல்லிக்காசு கொடுக்க மாட்டேன்”
சபதமெடு.
சாபம் வாங்கி வந்தோமடா-இதை
சங்கு ஊதி புதைக்க வேணும்.