சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 17, 2015

சிவராத்திரி ஸ்பெஷல் “அத்திரிபச்சா”....



ரு ஊர்ல ஒரு ஆளு இருந்தான் கொஞ்சம் விவரம் கம்மி...கூடவே ஞாபகமறதி அதிகம்...
அவனுக்கு கல்யாணம் ஆகியது...

 

சனி, செப்டம்பர் 20, 2014

கத்தி...( கதை)




ய்யா....துபாய்......... (வெளிநாட்டிலிருந்து) மாமா நாளைக்கு ஊருக்கு வர்ரார். 

ஓ! அப்படியா? வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வைக்கனும். அந்த நாட்டுல இருக்கிற சுத்தம் இங்க இருக்குமா? கொஞ்சமாவது நாமளும் டிசண்டா இருக்கிற மாதிரி காண்பிச்சிக்க வேண்டாமா?.

ஞாயிறு, ஜூன் 22, 2014

குட்டி கதை




அனைவருக்கும் அப்படித்தான் தோன்றியது.
 
 படுக்க முடியாமல் நின்றுக்கொண்டும் நடந்துக்கொண்டும் மூச்சு வாங்கிக்கொண்டும் இருப்பதைப்பார்த்தால் நிச்சமாகிவிட்டது அனைவருக்கும். 

புதன், ஜூன் 04, 2014

படிக்கும்பெண்களே! கொஞ்சம் இதையும் படிங்க!




நான் சொல்லப்போறது மூன்றுப்பெண்களின் கதை. உண்மையில் இது
கதையல்ல நிஜம்.


வெளியூரில்.......
மூன்றாம் வகுப்பு முட்டைமுட்டைக்கண்களுடன் அழகியப்பெண்... அழகென்றால் கொள்ளையழகு என்பார்களே அது. ஏதோ சொல்லவில்லையென ஆசிரியர் கோபத்தில் அடிக்க அது தடித்து வீங்கிவிட்டது, மறுநாள்...அப்பாவுடன் வந்து நிர்வாகியிடம் புகார்.அப்புறம் என்ன.?....

செவ்வாய், ஜனவரி 14, 2014

பழையது சாப்பிட்டேன்.



                    
                             (சிறுகதை)


25 ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி சொல்லப்பட்ட சிறு மற்றும் சிறந்த கதை. உங்கள் நினைவிற்காக.

பணக்காரன் ஒருவர் இருந்தார். அதிக சொத்துக்கள். தாத்தா அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களே நான்கு ஐந்து தலை முறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு செல்வ செழிப்பு. அதனால் அவனும் வேலைவெட்டி எதற்கும் போகாமல் வீட்டிலேயே ஜாலியாக உட்கார்ந்துக்கொண்டு சாப்பிட்டு சுற்றி திரிந்து வந்தான் . ஊரை சுற்றுவது நண்பர்களை விருந்துக்கு அழைத்து கும்மாளமிடுவது.... இப்படியாக கழிந்தது வாழ்க்கை.

 அவனுக்கு திருமணம் ஆகியது.
கணவனின் போக்கு மனைவிக்கு பிடிக்கவில்லை. இப்படியே போனால் நிலைமை என்னாவது ....என்னதான் சொத்துபத்து இருந்தாலும் நாமும் கொஞ்சமாவது உழைத்தாலாவது தானே இருக்கிற சொத்துக்களையாவது காப்பாற்ற முடியும்...உழைக்காமலே உண்பது அவளுக்கு பிடிக்கவில்லை.
 கணவனிடம் சொல்லிப் பார்த்தாள். அவன் மசிவதாக இல்லை. என்ன செய்யலாம் என அடிக்கடி யோசிப்பாள்.
பொங்கல் திருநாள் வந்தது.
கணவன் வேலை ஆட்களிடம் சொல்லி புதுப்பானை.... மஞ்சள்..... கரும்பு.....அரிசி....வெல்லம்.... இப்படி தேவையானதை எல்லாம் வாங்கி வரச்செய்தான்.
பட்டாடை உடுத்தி குடும்பத்தார் மற்றும் வேலையாட்கள் உடன்
பொங்கல் கோலாகலமாக கொண்டாடினான் . புது துணி மணி  அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அவன் வெளியில் சென்று நண்பர்களை விருந்துக்கு அழைத்து வருவதாகவும் வருவதற்கு நேரம் ஆகும் எனவே மனைவியை  சாப்பிட்டு முடித்து விட்டு விருந்த்துக்கு தயார் செய்து வைக்கும் படி கூறி விட்டு வெளியில் சென்றான்.
 நண்பர்கள் ஏழெட்டு பேர் சகிதம் உள்ளே நுழைந்தான். நெய்மணம் கமகமக்க பொங்கல் வாசனை காற்றிலே வாசலைத்தாண்டி பரவி வந்தது. வயிராற ஒரு பிடி பிடிக்கலாம் என நண்பர்கள் பேசிகொண்டனர்.
பல்வேறு வகையான பொங்கல் கூடவே வடை ......இத்தியாதிகள். விஸ்தாரமான சாப்பாட்டு மேசை....அனைவரும் பார்த்த மாத்திரத்திலேயே வயிறு நிறைந்து விடும் அளவிற்கு வகை வகையான சமையல். அனைவரும் மேசையில் அமர்ந்து உண்பதற்கு ஆயத்தமானார்கள்.
நண்பர்களுடன் அமர்ந்த பணக்காரன் பெருமை பொங்க அனைவருக்கும் வாழ்த்து சொல்லி உண்ண சொன்னார். அப்பொழுது மனைவியைப் பார்த்து சாப்பிட்டாயா? என கேட்க மனைவியும் “ஆம்  பழையது சாப்பிட்டேன் என்றாள். அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது . “என்னது பழையது சாப்பிட்டாயா ? கோபத்தின் உச்சிக்கே போனான் பணக்காரன். நண்பர்கள் அதிர்ச்சியில் வாயில் வைத்த பொங்கலை விழுங்க முடியாமல் திகைத்தனர். வேலையாட்களை அழைத்து சரமாரியாக திட்டி அடித்து விரட்டினான்......
“என்னடி சொல்ற?
ஆமாங்க பழையதுதான் சாப்பிட்டேன்..இது ஒன்னும் நீங்க சொந்தமா உழைச்சி சேர்த்த காசுல செய்தது ஒன்றுமே இல்லையே எல்லாம் உங்க தாத்தா அப்பா சேர்த்த காசுல வாங்கியது தானே..... அப்ப அவங்க சேர்த்து வச்சதெல்லாம் பழைய சொத்து தானே அப்ப பழைய சொத்துல வந்த பொருட்கள் எல்லாம் பழையது தான்... அதனால தான் அப்படி சொன்னேன் என்றாள். அவனுக்கு எல்லாம் புரிந்தது.... இனிமேல் திருந்தி உழைப்பதாக வாக்களித்தான். மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இனிய விருந்துண்டு மகிழ்ந்து பொங்கல் விழா கொண்டாடினர்.
 கதையின் கருத்து : எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆகவே உழைப்பால் உயர்ந்து உன்னத விழாக்கள் பல கொண்டாட அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

Pongal Glitter Graphic for Hi5
Festival, Pongal | Forward this Picture

திங்கள், நவம்பர் 26, 2012

ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்....


ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்....


திருமண வைபவங்கள் முடிந்து சற்று ரிலாக்ஸ் ஆன நேரம். ஆர்த்தியின் தோழிகள் மணமக்களை சூழ்ந்துக்கொண்டு.... “ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்  என கோரஸ் போட ஆர்த்தி சும்மா இருங்கடி என சற்றே வெட்கப்பட்டாள்.
மணமகன் வழக்கம் போல முழித்துகொண்டு “என்ன என்றான். ஆர்த்தி ஒண்ணும் இல்ல சும்மா என்றாள்...
“நான் சொல்லவா ஒருத்தி கேட்க... “ஏய் வேணாம் என ஆர்த்தி அவசரமாக அவளை தடுத்தாள். என்னப்பா யாராவது சொல்லுங்க என்றான் மாப்பிள்ளை.
சொல்ல ஆரம்பித்தாள் தோழி.........
ஒரு நாள்..
“ஏய் இந்த பீரியட் லெக்ஸரர் வரமாட்டார்டி?
என்ன பண்ணலாம்?
“வாங்கடி மரத்தடிக்குப் போவோம்
“ஏய் கேண்டீன் போலாம் எனக்குப் பசிக்குதுப்பா
“நீ செலவு பண்றீயா நாங்க வரோம்
“சரி வந்து தொலைங்க
ஹேமா வின் செல் சிணுங்க....
“யார்டி உன் ஆளா ?
“ஆமாம்பா
“செல்ல தூக்கினு தூரப்போ....... அப்படியே நாசமாப்போ....
 “ஏன்டி லவ் பண்றது தப்பா?
“ஆமாம்னும் சொல்லலாம். இல்லணும் சொல்லலாம்....
“இவ ஒரு குழப்பவாதி போடி இவளே..
-கேண்டீன்-
“எனக்கு பஜ்ஜிப்பா
 “எனக்கு பிஸ்கட்
“தோடா இது குழந்தை இன்னும் பிஸ்கட் திண்ணுனுகீது
அனைவரும் சிரிக்க....
“எனக்கு சமோசா
“எனக்கு எல்லாத்துலயும் ஒன்னுஒன்னு
“இவ வீட்டுக்காரன் தின்றதுக்கு வாங்கிப்போட்டே போண்டியா போவப்போரான்
“ஆமா ஆண்டியா ஓடாம இருந்தா சரிதான்
குபீர் சிரிப்புகள்.......
“ஏய் இந்தாப்பா எனக்கு பஜ்ஜி போதும்
யாழினி வேண்டாம் என மறுத்தாள்.
“ஏய் அன்பா கொடுக்கிறாப்பா வாங்கிக்க
அவ அன்பா கொடுக்கலனாலும் நான் வாங்கிப்பேன் என அதை பிடுங்கித்தின்றாள் வர்ஷா.

“ஆமா, அன்பா கொடுத்தா எதை வேணும்னாலும் வாங்கிக்கலாமா?

“ஏன் வாங்க்கிக்ககூடாது?
“அது இல்லப்பா
“வாங்கிக்கலாம்
இப்ப இவ வாங்கிக்குவா பாரு என உதட்டில் பச்சென்று முத்தமிட்டாள்.
“அட நாராயணா அவ ஆளு பார்த்தான் உன்னை கொன்னே போட்டிடுவான்
அவன் ரொம்ப சென்ஸிட்டிவ் பா
ஓ வென அனைவரும் கூச்சலிட்டனர்...
“நான் அன்பா கொடுத்தா நீ எதை வேணும்னாலும் வாங்கிப்பியா?...
“கொடேன்
யாரும் எதிர் பாராத தருணம்...
ஆர்த்தி கைகளை உயர்த்தி அவள் கன்னத்தில் பளார் என அறைந்தாள்.
அடி சற்று பலமாகவே பட்டு கன்னத்தில் விரல்கள் பதிவு தெரிந்தது.
வர்ஷாவின் கண்களில் கண்ணீர் ......
அனைவரும் சைலண்ட்....
“சாரிப்பா விளையாட்டுக்குதான் அடித்தேன்....
“இன்னாதான் இருந்தாலும் இப்படியா அடிக்கிறது
“அதான் சாரி சொல்லிட்டா இல்ல...விடுங்கடி...
வர்ஷாவின் அழுகை தேம்பலாக மாறியது...
“சாரிடி நீ தானே சொன்ன அன்பா கொடுத்தா எதை வேணும்னாலும் வாங்கிக்கலாம்னு ....தமாஷ்க்கு தான் அடிச்சேன்பா வலிச்சிடுச்சா ?
வர்ஷா நிமிர்ந்தாள்.கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“ச்சீ நீ ரொம்ப மோசம்
“ஆமாண்டி"- ஒருவள்
“ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்...இன்னொருவள்.
“ச்சீ அதான் நானே சொல்லிட்டேனே...என்ற வர்ஷா ஆர்த்தியின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

அன்பு வென்றது.

“அன்பு இருந்தா எதையும் தாங்கிக்கலாம் வாங்கிக்க கூடாது என்று ஒருவள் கூற....
மீண்டும் அங்கே சிரிப்பு குடிகொண்டது.
அதுல இருந்து இவபேரு ‘ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்...தான்.