குறுங்கவிதைகள்
ஆன்மீகம்
அக்கிரமம் அராஜகத்தை அடக்க
ஆன்றோர்களின்
அகிம்சை மொழி -
‘சாமி கண்ணைக் குத்தும்’.
............00000...........................
காசு பணம் துட்டு மனி
உள்ளங்களில்
அமிலங்களை ஊற்றி
உணர்வுகளில்
உலோகத்தன்மையை
உருவாக்கி வருகிறது
பாழாய் போன பணமும் பதவியும்.
.............................................................................
என்ன பயன்?
முகநூல் சொந்தங்களின்
கணக்கு பார்த்தான்....
அண்டை வீட்டினருடன்
போட்ட
சண்டைக்குப்பின்.