செவ்வாய், நவம்பர் 18, 2014

சாயல்....




 
கடலை முகர்ந்து குப்பியில் அடைத்து
கையில் கொடுப்பேன் கண்ணின்மணி-அந்த
நீலம் தொலைத்த வானம் வந்து
வணங்கி கேட்கும் வண்ணமடி...

போனா போகுது தந்துவிடு
வானவில்லை கப்பம் வாங்கிக்கடி
வானும் பூமி வாழும் வரைக்கும்
வாழ வேண்டும் நீயுமடி.

 
நீ கனவில் பேசும் முனகல் கேட்க
கோடி புண்ணியம் வேணுமடி
உன் கொலுசின் ஓசை இசையை கேட்டு
தெருவே திரும்பி பார்க்குமடி- உந்தன்
துள்ளல் நடையில் எள்ளிப்போனாய்
மானின் குட்டி ஓட்டமடி
நீ கொஞ்சும் அழகில் தஞ்சம் கேட்டேன்
என் தாயின் மடிதான் உந்தன் மடி.

 
குயில்கள் எல்லாம் கூட்டம் போட்டு
தெய்வத்தை நேரில் கூட்டதடி- உன்
குரலின் அழகில் தோற்றதனால்
கூப்பாடு போட்டது கண்டபடி
பயிர்கள் யாவும் சாமரம் வீசும்
பக்கம் நீயும் போகும்போது
இரவில் வந்து நிலவு பார்க்கும்
தனது சாயல் உள்ளதடி
தங்கம் வந்து உரசிப்பார்க்கும்
தனதுதரத்தை உந்தன் காதில் சாய்ந்தபடி
எல்லாம் இன்பம் நீயே தெய்வம்
மனசு சொன்னது கண்டபடி.

 

 


. இது ஒரு சாயல். ரொம்ப நாள அரிச்சுகிட்டு இருந்தது, இறக்கி வச்சாச்சு.

என்னடா இது சோதனை ???

3 கருத்துகள்:

  1. தங்களின் பிள்ளைகனியமுது அருமை !
    தமிழமணத்தில் சேர்த்து வோட்டும் போட்டுவிட்டேன் !

    பதிலளிநீக்கு
  2. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!