வியாழன், பிப்ரவரி 12, 2015

நான் ரொம்ப பிஸி...



கத்தியின்றி இரத்தமின்றி
காதல் யுத்தம் நடந்திடும். 

உடல்முழுதும் உள்ளுக்குள் 
உலகப்போர் மூண்டிடும். 


இதயங்கள் இதயங்கள் 
இணைந்தே காதல்போர் செய்திடும். 

வேண்டாம் சொல்லும் 
உறவுகள் எல்லாம் 
வெள்ளைக்காரர்கள். 

வாழ்க சொல்லும் 
தோழமையெல்லாம் 
வீரத் தளபதிகள். 

இதயத்துடிப்புகள் இரட்டிப்பாகும் 
இயங்காமலும் சிலநொடிகள் 
இறந்து போகும். 

மூளைச்செல்கள் முட்டாள்களாகும் 
முழுமூச்சாய் இயங்கும் 
முடங்கியும் போகும். 

பசிக்காமலேயே உண்ணும்
புசிக்காமலேயே உறங்கிப்போகும்.

அனைத்தின் மீதும் 
அன்பைப்பொழியும்
அடுத்த நொடியே எடுத்தெரிந்து வீசும்.

வீரனையும் கோழையாக்கும் 
கோழையையும் வீரனாக்கும்
வித்தியாச வாத்தியார்.

உறவுகள் சில
சிறகொன்றை இழக்கும்
கூடுகள் சில
குதுகளிக்கும்.


அனுபவிப்பவர்களுக்குக்தான்
அதன் 
அட்டகாசங்கள் புரியும்.

வாலிபத்திலும்
வயோதிகத்திலும்
விளங்கமுடியா...........
காதல் 
சுகமானது.
.....................................................................................................................

காதலர் தினம்,

கிரிக்கெட் மேட்ச்,

கெஜ்ரிவால் பதவி,

.......
............. 
......................
நான் ரொம்ப பிஸி -
பிப்ரவரி 14.
....................................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!