வியாழன், ஏப்ரல் 06, 2017

அன்னதானம்

அக்கம் பக்கம்
உற்றார் உறவினர்
அனைவரையும் அழைத்து
அரங்கேறியது அந்த கோலாகலம்.

"கொலதெய்வ கோவிலுக்கு கும்பிடப்போறோம்"

மழலையின் மொழிபிழை.

தாரை தப்பட்டை
தலை நிமிர்ந்து
தாராளமாய் அருள் பாளித்தது
குல தெய்வம்.

வாழையிலை முழுதும்
வக்கணையாய் வழிந்து நிறைந்தது
முக்கறிச்சோறு.

வேண்டாம் என்ற 'விஐபி'க்கு
வலுகட்டாயமாய் வைத்துச்சென்றனர்
"வயிறாற சாப்பிடுங்க
வயித்துக்கு வஞ்சனை பண்ணாதீங்க."

'வெரி நைஸ்' விருந்து
வயிற்றில் தான் இடமில்ல
சுகரும் பிபியும் சும்மா எகிறுதில்ல...
விழுந்து விழுந்து சிரித்தார்
விருந்தினர் ஒருவர்.

தூரத்தில்
துரத்தி விடப்பட்ட பலரில்...
கூப்பாடு போட்ட
குருட்டு கிழவியும்...
சாப்பாடு கேட்ட
கூனன் கிழவனும்...
அடி வயிறு பசித்தும்
ஆங்கே சிலர்.

தொல்லை தாங்க முடியல...
சாப்பாடு தீந்துப்போச்சி...
"இல்லை" என்று சொன்னார்கள்
ஆயிரம் பேருக்கு
அன்னதானம் வழங்கிய
அன்னலட்சுமியும்
அவரது புருஷனும்.

தலைவாழை இலையில்
தன் முன் கிடந்த
முப்பூசை படையலைப்பார்த்து
தலை கவிழ்ந்துக்கொண்டது குழந்தை சொன்ன
"கொலதெய்வம்".

3 கருத்துகள்:

 1. நடைமுறையின் வேதனையான உண்மை நண்பரே
  த.ம.1

  பதிலளிநீக்கு
 2. அருமை!!! உண்மைதான் நண்பரே!...வேதனையான விஷயம்..
  வந்தது தெரியவில்லை...அதாவது நீங்கள் மீண்டும் எழுதத் தொடங்கியது...இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் கொடுத்தாச்சு..இனி பெட்டிக்குள் வந்துவிடும்..


  பதிலளிநீக்கு
 3. "தூரத்தில்
  துரத்தி விடப்பட்ட பலரில்...
  கூப்பாடு போட்ட
  குருட்டு கிழவியும்...
  சாப்பாடு கேட்ட
  கூனன் கிழவனும்...
  அடி வயிறு பசித்தும்
  ஆங்கே சிலர்" ஆகியோரின்
  நிலைமை கவலைக்கிடமா?

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!