சனி, மார்ச் 07, 2015

யாதுமாகினாய் மாதே...



பூமிக்கு பெருமை சேர்க்க
பிரம்மன் தந்த பொக்கிஷம்-
பெண்மை.

பூவைப்போல் வாசமும்
பூவைப்போல் ஈர்ப்பும்
பூவையர் என்ற
பொருத்தப்பெயர் யாரிட்டதோ ?
புண்ணியவான்.....

பார்த்து போ....
போனதும் போன் பண்ணு.....
சும்மா வெளியில சுத்தாத....
சாப்பிட்டாயா..
நல்லா சாப்பிடு.....
நூறுகிலோ பிள்ளையை பார்த்து
நூலாய் இளைச்சிட்டே.....
ஐம்பது வயது குழந்தைக்கு......
எழுபது வயது
பெற்றவளின் பாடம்
சிரிப்பாய் இருக்கும்-
 நம் பிள்ளைகள் நம்மிடம்
எல்லாம் தெரியும் போ
என்று கூறும்பொழுது...

அன்பென்றாலே
அம்மா வாகிப்போனது-
எந்த வயதிலும்.

அம்மாவைச்சொல்லும் போது
அரைச்சொட்டவது கண்ணீர் தளும்பும்
ஆனந்தமாகவோ அடிமனது உறுத்தலாகவோ.


பிள்ளையாய் பெற்றாளாய்...
ஒரு வீட்டில்
காலை முதல் இரவு வரை
ஒரு நாளில்
பெண்ணினத்தின் 
அவதாரங்களை நினைத்துப்பாருங்கள்.
எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்..
அத்தனையிலும்.... அன்பைக்கலந்து...
வரம்பிற்குள் வரையறுக்க இயலாத
மானுட தெய்வங்களாய் பெண்கள்.

வேர்களாய் அவர்கள் இருப்பதினாலேயே-நாம்
விருட்சகமாய் வளர்ந்து நிற்கின்றோம்
விழுதுகளான வாரிசுகளுக்கு
வேர்களின் விலாசம் சொல்லிக்கொடுப்போம்.

பெண்மையை போற்றுவோம்.!.

மாந்தரின் துயர் துடைக்க
யாதுமாகினாய் மாதே நீ ! 

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!