புதன், நவம்பர் 19, 2014

அமெரிக்கரும் இந்தியரும் மட்டுமே சிறந்தவர்கள்......



ரு விமானம் தனது வழக்கமான  உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது, அதில் அநேக நாட்டவர் பயணம் செய்துக்கொண்டிருந்தார்கள். அதில் இருந்த அமெரிக்கர்,இந்தியர், ஜப்பானியர், சீன நாட்டுக்காரர் ஆகிய நாட்டுக்காரர்களிடையே சில விவாதம் நடந்தது.....




ரிங்க முடிவா ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம், அனைவரும் ஒவ்வொருவராக கண்ணை மூடிக்கொண்டு கையை வெளியே நீட்டி அவர்கள் நாடு வருவதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்... அப்படி சரியாக கூறுபவர்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து பரிச்சளிப்போம்.ஓகே.


அனைவரின் ஒப்புதலுக்குப்பின்னர் முதலில் அமெரிக்க நாட்டவர் ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டிக்கொண்டு வந்தார்.... கொஞ்ச நேரம் கழித்து "ஹேய் எங்க நாடு வந்திடுச்சி" என்றார்... அனைவருக்கும் ஆச்சரியம் “எப்படி சரியாக கண்டுபிடிச்சீங்க?, அமெரிக்காக்காரர் சொன்னார் ”வானுயரக்கட்டிடங்கள் எங்கள் நாட்டில் உண்டு. அவை என் கையில் தட்டுபட்டன அதனால் எங்க நாடு என்பதை கண்டுபிடித்துவிட்டேன் என்றார்.  ஓகே... உங்களுக்கு பரிசு உண்டு.... அடுத்தது ஜப்பான் நாட்டவர்...கையை வெளியே நீட்டிக்கொண்டு வந்தார்... அவரது கணிப்பு தவறாக இருந்தது இப்படியாக ஒவ்வொரு நாட்டவரும் தவறாகவே சொல்லி வந்தனர் அமெரிக்கக்காரர் மட்டுமே சரியாக கண்டுபிடித்தார்....


 கடைசியாக இந்தியரின் முறை வந்தது... கையை வெளியே நீட்டிக்கொண்டே வந்தார் சிறிது நேரத்தில் "எங்க இந்தியா வந்து விட்டது" என்றார் அனைவருக்கும் மிக்க ஆச்சரியம் எப்படி நீங்கள் மிகச்சரியாக கண்டுபிடித்தீர்கள் எனக்கேட்டனர் அதுவா ரொம்ப சிம்பில்  நான் கையை வெளியே நீட்டிக்கொண்டு வரும்பொழுது எனது கைகடிகாரமும் மோதிரமும் காணவில்லை அதை வைத்து  தான் என்றார்.

14 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    இந்தியர் வெளியே நீட்டிக்கொண்டு வரும்பொழுது எனது கைகடிகாரமும் மோதிரமும் காணவில்லை அதை வைத்து தான் என்றார்
    இரசிக்கவைக்கும் கதை ஐயா பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வெளியசொல்ல வெட்கமா தான் இருங்குங்க அய்யா, இதைவிட எத்தனை கொடுமைகள் தினம் தினம் இங்க நடக்குது? அதனை மன்னிப்பதுபோல் என்னையும் பொருத்தருள்க.

      நீக்கு
  3. நகைச்சுவைக்காக ரசிச்சாலும், மனதை வருத்துகிறது கிங் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்துகிறேன் அய்யா, இனி இப்படி நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.நன்றி.

      நீக்கு
  4. திருட்டு எந்த நாட்டில்தான் நடக்கவில்லை ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பதிவையும் பார்த்து மகிழ்ந்தேன் அய்யா. வருகைக்கு மிக்க நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  6. காந்தி மகான் சுற்றி வரும் வேளையில் இந்தக் கதை....உங்கள் தளத்திற்கு இன்னும் வரவில்லையா? நாங்கள் அனுப்பியிருந்தோமே! இந்தக் கதையைப் பார்த்து நொந்து போயிருப்பாரே!

    பதிலளிநீக்கு

  7. கைகடிகாரமும் மோதிரமும் சுருட்டுபவர்கள் இந்தியர்கள் இல்லையே!
    உலகிற்கு நல்லறிவை ஊட்டிய மேதைகளும் இந்தியர்களே!

    சிந்திக்க வைத்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!