செவ்வாய், ஜனவரி 02, 2018

Top 1 Tips

                        
என்றும் மறவா இதய உறவுகளுக்கு வணக்கம்,
                                              எல்லா விளம்பரங்களிலும் ‘கண்டிஷன் அப்ளை’ என்ற வார்த்தை கண்ணுக்கே தெரியாது. சில இடங்களில் எண்களும் எழுத்துக்களும் மிகமிகச்சிறியதாக பதிவிட்டு இருப்பார்கள் இது பல நேரங்களில் நம்மை சிக்கலில் மாட்டிவிடும். “ஓ! அப்படியா நீங்க சொல்லவே இல்ல” அப்படினு நாமும், “நீங்க தான் சரியா படிச்சிப்பார்க்கல” னு அவங்களும் வாதிடுவது வழக்கமாகிவிட்டது.

ஏதாச்சும் புரியுதுங்களா.....!

Font size ! Font size ! Font size !  Font size !     Font size !    !     Font size !

புதன், நவம்பர் 22, 2017

SABL time table

SABL வகுப்பறையில் பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை இது.  ஆசிரிய அன்பர்கள்  ஒரு பிரதி எடுத்து வகுப்பறையில் பார்வையில் படும்படி மாட்டி வைத்துக்கொண்டு பின்பற்றலாம். 
Thank you.

வியாழன், ஏப்ரல் 06, 2017

அன்னதானம்

அக்கம் பக்கம்
உற்றார் உறவினர்
அனைவரையும் அழைத்து
அரங்கேறியது அந்த கோலாகலம்.

"கொலதெய்வ கோவிலுக்கு கும்பிடப்போறோம்"

மழலையின் மொழிபிழை.

தாரை தப்பட்டை
தலை நிமிர்ந்து
தாராளமாய் அருள் பாளித்தது
குல தெய்வம்.

வாழையிலை முழுதும்
வக்கணையாய் வழிந்து நிறைந்தது
முக்கறிச்சோறு.

வேண்டாம் என்ற 'விஐபி'க்கு
வலுகட்டாயமாய் வைத்துச்சென்றனர்
"வயிறாற சாப்பிடுங்க
வயித்துக்கு வஞ்சனை பண்ணாதீங்க."

'வெரி நைஸ்' விருந்து
வயிற்றில் தான் இடமில்ல
சுகரும் பிபியும் சும்மா எகிறுதில்ல...
விழுந்து விழுந்து சிரித்தார்
விருந்தினர் ஒருவர்.

தூரத்தில்
துரத்தி விடப்பட்ட பலரில்...
கூப்பாடு போட்ட
குருட்டு கிழவியும்...
சாப்பாடு கேட்ட
கூனன் கிழவனும்...
அடி வயிறு பசித்தும்
ஆங்கே சிலர்.

தொல்லை தாங்க முடியல...
சாப்பாடு தீந்துப்போச்சி...
"இல்லை" என்று சொன்னார்கள்
ஆயிரம் பேருக்கு
அன்னதானம் வழங்கிய
அன்னலட்சுமியும்
அவரது புருஷனும்.

தலைவாழை இலையில்
தன் முன் கிடந்த
முப்பூசை படையலைப்பார்த்து
தலை கவிழ்ந்துக்கொண்டது குழந்தை சொன்ன
"கொலதெய்வம்".