புதன், ஆகஸ்ட் 10, 2016

சுவர்கள்...

சுவர்கள்..
............
அய்ந்து வயதில்
அசிங்கமாகி விட்டதென
அடித்ததாய் ஞாபகம்...
அறுபத்தைந்து வயதிலும்
ஆதங்கப்பட்டாள்...
வெள்ளையடிக்கப்படாததும்
விரிசல்கள் இடையேயும்
அடிப்படை எழுத்துக்களும்
ஆரம்ப ஓவியங்களும்...
இன்னும் மிச்சம் மீதியாய்
ஈ.. யென  மங்களாய்
இளித்துக்கொண்டிருக்க...
கொஞ்சம் நிம்மதி
பெருமூச்சுவிட்டாள்.
தள்ளாத வயதில்
தவிக்கவிட்டு
தனிக்குடித்தனம் போன
மகன் கூட இருப்பதாகவே!.
அப்படி ஒன்றும்
எளிதில்
ஏற்படாது
அம்மா மனதில்
இடமாற்றம்.

3 கருத்துகள்:

  1. அருமையான வரிகள்
    தொடருங்கள்



    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. அற்புதம்
    மிகக் குறிப்பாக துவக்கமும்
    முடித்த விதமும்....
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்.
    த.ம. 1

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!