ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

மரம்




ஒற்றைக்கால் ஊராட்சி மன்றம்
கிளைகள் எல்லாம் சாலைகள்
இலைகள் எல்லாம் வீடுகள்
மலர்கள் எல்லாம் மங்கையர்கள்
காய்கள் எல்லாம் கனவான்கள்
பழங்கள் எல்லாம் பெரியோர்கள்
வந்துபோகும் பறவைகளே உற்றார் உறவினர்
இலவச இருப்பிடம்
இலவச உணவுத்திட்டம்
இளைத்தோர்க்கு நிழற்குடை
இலவச சூரிய அடுப்பில்
இனிமையாய் நீ ஆக்கித்தரும் -
இலவச ஆக்சிஜன் திட்டம்
இன்னும் இன்னும் பலவாய்
உன்னை வெட்டிப்போட்டாலும் விறகாய்.........
இலவச திட்டங்களை
நீ தான் அறிமுகம்  செய்தாயோ !
மரமே !
கோடான கோடியாய் கொண்டாட வேண்டும் உன்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!