ஞாயிறு, மார்ச் 15, 2015

please help me....தயவுச்செய்து எனக்கு உதவுங்கள்.

இந்த அசிங்கம் பிடிச்ச நாய்களை  பிஞ்சு போன செருப்பால் அடித்து துரத்த வேண்டும் தயவுச்செய்து உடனே எனக்கு உதவுங்கள்.

எனது பிரவுசர்களில் அனைத்து வகையினையும் உபயோகித்து பார்த்துவிட்டேன் பலமுறை அன் இன்ஸ்டால் செய்து ரீ இன்ஸ்டால் செய்து விட்டேன்..


எல்லா பிரசுசரிலும் என் தளம் மட்டுமே ஓப்பன் ஆகிறது Blogger ஓப்பன் ஆகிறது போஸ்ட் அப்டேட் ஆகிறது பதிலலிக்க முடிகிறது,
மற்ற யாருடைய  எந்த தளத்திற்கும் செல்லமுடியவில்லை மற்றவர்கள் தளமோ மற்ற எந்தவொரு வெப்சைட்டோ ஓப்பன் ஆகவில்லை உதாரணமாக  google , flower என டைப் செய்தால் கூட கீழே படத்தில் உள்ள நாதாரிகள் தளம் காட்டப்படுகிறது.







சில நாட்களாக செம கோபம்...அசிங்கமா திட்டணும்போல இருக்கு. நாகரீகம் கருதி விட்டுவிட்டேன்.அடுத்தவரிடம் சொல்ல அசிங்கமாகவும் இருக்கு...

 வீட்டில் உபயோகிக்க முடியவில்லை பிள்ளைகள் பயன் படுத்த உட்கார்ந்தால் எனக்கு உயிரே போகிறது  யாரையும் கம்பியூட்டரில் கைவைக்க விடமுடியவில்லை ஸ்கேன் செய்தாலும் வைரஸ் இல்லை  என்ன செய்தும் மாற்றமுடியவில்லை.

இதனை எப்படி நீக்குவது ?

தயவுச்செய்து தீர்வு கூறுங்கள்.

உங்கள் பதிலுரைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு:- தவறான வார்த்தைகள் இருப்பின் மன்னிக்கவும் அம்புட்டு கோபம்.

9 கருத்துகள்:

  1. வலைச் சித்தர் மனது வைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் !அவருடன் நீங்கள் ஆலோசிக்கலாமே !

    பதிலளிநீக்கு
  2. நண்பரே பதிவில் ஒன்றுமே இல்லாமல் தலைப்பு மட்டும் இருந்ததால் (ஓகே ஐம் ரெடி) என்று எழுதினேன் இப்பொழுதுதான் விபரம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    தகவல்வழி முறைகள்

    1-gmail-கடவுச் சொல்லை மாற்றுங்கள்..
    2-Template -சென்று இடப்பக்க மூலையில் Backup/Restore சென்று தங்களின் பதிவை தரவிறக்கம் செய்து சேமித்து வைக்கவும். ஏன் என்றால் தங்களின் பதிவுகள் அழிந்து விட்டால் மீண்டும் பதிவை உருவாக்கலாம் தறவிறக்கம் செய்ததை வைத்து..

    3. வேறு கணனியில் திறந்து பாருங்கள் தாங்கள் சொல்லிய கட்டளை வருகிறாதா என்று..
    4.கணனியை நன்றாக சுத்தம் செய்யவும்....

    மேலும் விபரங்களை தனபாலன் அண்ணாவை அனுகி பார்க்கவும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. உடனே அழையுங்கள்
    வலைச் சித்தர்
    திண்டுக்கல் தனபாலன் அவர்களை
    செல் எண் 99 44 34 52 33

    பதிலளிநீக்கு
  5. நண்பரே! தங்கள் கணினியின் கன்ட்றோல் பானலுக்குச் செல்லுங்கள். அங்கு ப்ரோக்ராம் என்று இருக்கும் இல்லையா அதற்குள் செல்லுங்கள், அங்கு ப்ரோக்ரம்ச் அண்ட் ஃபீச்சர்ஸ் இருக்கும் அதற்குள் செல்லுங்கள். அங்கு நீங்கள் சமீபத்தில் தரவிறக்கம் செய்தது இருந்தால் அதனுடன் வேறு எதாவது இனாமாக வந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி இருந்தால் அவற்றை அன் இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் கூகுள் ஓபன் செய்துவிட்டு வலது பக்க மூலையில் இருக்கும் மூன்று கோடுகள், இல்லை என்றால் ஹிஸ்டரிக்குச் செல்லுங்கள். இல்லை என்றால் கன்றோல் பனலுக்குள் நெட்வொர்க் அண்ட் இன்டெர்ன்னெட் என்று இருக்கும் இல்லையா அதற்குள் செல்லுங்கள். அங்கு டெலிட் ப்ரௌசிங்க் ஹிஸ்டரி அண்ட் குக்கிஸ் என்று இருக்கும். அதில் சென்று டெம்ப்ரரி ஃபைல்ஸ், குக்கீஸ் ப்ரௌசிங்க் ஹிஸ்டரி எல்லாவற்றையும் டெலிட் செய்யுங்கள். பின்னர் ரி ஸ்டார்ட் செய்து பாருங்கள். சரியாகிவிட்டதா என்று பாருங்கள். இங்கு முதலில் சொன்னது மிகவும் அவசியம்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. இன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!