வெள்ளி, மார்ச் 27, 2015

உத்தம வில்லன் யார்..... ?

சும்மா சில விடுகதைகள் விடைகண்டுபிடித்து மகிழுங்கள்.


1).          தின்னுகிற பேரு-கணினியிலும்
             திறனாய் வேலை செய்வான்
             யாரு...?
..........................................................


2).        கடல் உண்டு தண்ணீர் இல்லை
            நாடு உண்டு வீடு இல்லை
            அது என்ன?

.................................................................

 3).     முச்சந்தியில மூணு கண்ணு
           மதிச்சு நடக்க சொல்லும் கண்ணு
          பார்த்து நடந்தா பாதுகாப்பு
          அது என்ன?
..................................................

4).   பூமி கிழிச்சக்கோடு
       பொல்லாத சின்னக்கோடு
       புலம்பி தள்ளும் மனிதக்கூடு
      அது என்ன?
.........................................................

5).      தலையில் தட்ட தட்ட
         எண்ணும் எழுத்தும் எழுதி முடிப்பான்
        தம்பி அவன் பேரென்ன?
..........................................................

6).    கடல் நீரில் வளர்வான்
       மழைநீரில் மடிவான்
      அவன் யார்?
..........................................

7).  தண்ணியிலே கொண்டாட்டம்
      தரையிலே திண்டாட்டம்
      அவன் யார்?
........................................................

8).       உடம்புக்குள்ளே கடிகாரம்
           ஓய்ந்துவிட்டால் உடனே பரிகாரம்
          அவன் யார்?
......................................................

9).     ஊளையிடும்
        ஊரை சுமக்கும்-சிலசமயம்
         'உத்தம வில்லன்' அவன் யார்?

.................................................................
10).     கோடி கோடி புள்ளி வச்சும்
           கோலம் போட முடியலியே ?.....

9 கருத்துகள்:

  1. திரும்ப வருவேன் விடைகளோடு
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    4 விடுகதைகளுக்கு விடை தெரியும் மற்றவை தெரியாது.... மற்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன் சிந்திக வைக்கிறது... த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. 1 பிள்ளையார் வாகனம்
    2 வரைபடம்
    3 சிக்னல்
    4 அடச்சே(மன்னிக்க) அட்ச 'ரேகை'
    5 தட்டச்சு!
    6 உப்பு (அ) பாசி
    7 மீனா!? நடிகை அல்ல
    8 நாடி
    9 ரயிலு வண்டி
    10 வானம்

    பதிலளிநீக்கு
  4. நான் சொல்ல வந்ததை எல்லாம் சிவம் ஜி சொல்லிட்டாரே ...ஹிஹி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நான் சொல்லியுள்ள விடையெல்லாம் சரியான்னு எனக்கே தெரியலை.
      நல்லவேளை நீங்களும் நானும் ஒண்ணா பரீட்சை எழுத போகலை. என்ன ஆயிருக்கும் கொஞ்சம் யோசிங்க.

      நீக்கு
  5. 1.சிப்ஸ்
    2.வரைபடம்
    3.டிராஃபிக் லைட்
    4.பூகம்பம்
    5.தட்டச்சு அல்லது கீபோர்ட்
    6.உப்பு
    7.மீன்
    8.இதயம்
    9.தொடர்வண்டி
    10.விண்மீன்கள்.

    பதிலளிநீக்கு
  6. விடைகள் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    சிறப்பு நன்றியும் பாராட்டுக்களும் அன்பே சிவம் சகோதரருக்கு.....

    பதிலளிநீக்கு
  7. சிப், மீன், உப்பு, விண்மீன், கீ போர்ட், தவிர வேற எதுவும் கண்டுபிடிக்க முடியலங்க...ஆனா அருமை எல்லாமே!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!