சனி, மார்ச் 28, 2015

கிரிக்கெட்...அட தெளிவா தான்யா பேசுறான்.....நம்ம ஆளு

குடிமகன்1 :- “ தொட்டிலையும் ஆட்டி விட்டு குழந்தையும் கிள்ளிவிட்டு “ இந்த பழமொழி சரியா தான் பொருந்தும்னு சொல்றீங்களே ஏன்? “

குடிமகன்2 :- “ டாஸ்மார்க்கையும் திறந்து அங்க குடிச்சிட்டு புறப்படறவங்களை  கொஞ்ச தூரத்திலேயே நின்னு வாயை ஊதுனு போலீஸ் செக்கப் பண்றாங்களே அதைச்சொன்னேன்...’குடிக்கவும் கடையை வச்சிட்டு ஏன் குடிச்சிட்டு வர்ரேனு கேஸ்ஸும்’ போடுறாங்களே அதைச்சொன்னேன்”

குடிமகன்1 :-  “ ????? “
...............................................
 இப்படியாக இருக்குமோ?

ரசிகன்1:- “கோஹ்லி ஏன் அரையிறுதியில் ஒரு ரன் அடிச்சார் தெரியுமா?”
ரசிகன்2:- “ ஏங்க? “

ரசிகன்1:- “ அன்னைக்கு ராத்திரிதான் பாட்சா படத்தை பார்த்துட்டு ‘நான் ஒரு ரன் அடிச்சா 100 ரன் அடிச்சா மாதிரி’ னு சொல்லிகிட்டே இருந்தார்..... அந்த நினைப்புலேயே 1 ரன் அடிச்சதும் நாம 100 ரன் அடிச்சுட்டோம்னு அவுட் ஆகிட்டார் “

ரசிகன்2:-  “?????”
..................................................................
 இது தெரியாமப்போச்சே ! விராட்கோஹ்லிக்கு பதில் நம்ம சினிமா நடிகர்களை ஆடவிட்டிருக்கலாமா ஏன்? " 

"இவங்க தான் ஓங்கி அடிச்சா 1 1/2 டன் வெயிட்ல அடிப்பாங்களே ...எல்லாம் சிக்சரா போயிருக்கும்".
............................................................................................
அட ஆமாம் இல்ல.... 

ஆமாவா இல்லையா......


"அட கிரிக்கெட் அம்பயர் வேலை அவ்வளவு கஷ்டமப்பா "

 "ஏன்?" 

"தப்பி தவறிக்கூட தலையை சொரிய கையை தூக்க முடியாது.."


14 கருத்துகள்:

 1. அனைத்தும் ஸூப்பரப்பூ
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. அம்பயருக்கு வீட்டிலும் இதே பிரச்சினைதான் ,கையை தூக்க முடியலே ,மனைவி முன்னால்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டைவிட கிரவுண்டே தேவலாம்னுதான் அம்பயரா வந்துடராங்களோ?

   நீக்கு
 3. வணக்கம்
  ஒவ்வொன்றையும் இரசித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஆகா
  அதிலும் அந்த முதல் நகைச்சுவையில்,அக்குடிமகனது வருத்தம் நியாயமானதே
  தம +1

  பதிலளிநீக்கு
 5. எல்லா நகைச்ச்வையும் மிக அருமை. தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!