புதன், மார்ச் 25, 2015

சும்மா சிரிங்க பாஸ்....


நீங்க எனக்கு போட மறந்துடாதீங்க....

“புதுசா பிளாக் ஆரம்பிச்ச நம்ம தலைவர் ஏன் கோபமா இருக்கார்?”

தேர்தல்ல நின்னேன் அங்கயும் யாரும் ஓட்டுபோடலே பிளாக் ஆரம்பிச்சேன் இங்கியும் யாரும் ஓட்டு போடமாட்றாங்களேனு புலம்பறார் “
...............................................................................................................
அட !....

 

“ சாதாரண மேனுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன வித்தியாசம்? “ 

ஜட்டி போட்டு பேண்ட் போட்டா சாதாரணமேன், பேண்ட் போட்டு அதுமேல ஜட்டி போட்டா சூப்பர்மேன்”
............................................................................
மொக்க...

வாட்சை ஏன் கையில கட்றோம்?

 “ தெரியலியே ?”

“கட்டலனா கீழே விழுந்திடும் இல்ல “
..............................................................................................
நல்லா பேசுறாங்கய்யா...

“ உங்க அம்மாவுக்கும் உன் மனைவிக்கும் சண்டைனு கோர்ட்டுக்குப்போனாங்களே  நீ யாரை காப்பாத்தினே ? “

“ நான் ஜட்ஜ் அம்மாவை காப்பாத்த வேண்டியதாப்போச்சு “

.................000000000000000000.....................................
நீ மாத்தி மாத்தி பேசுற ....
 
 " இந்த இங்கிலீஸ்காரங்க கிட்ட நம்ம தமிழ்காரங்க மாதிரி பேச்சுல சுத்தம் இல்லப்பா"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

" நாம 'டைகர்' அப்படினு நாம எழுதினா 'டைகர்'னு தான் படிப்போம் 'டின்' அப்படினு எழுதினா 'டின்' அப்படினு தான் படிப்போம் ஆனா இந்த ஆங்கிலேயர்கள் என்ன பண்றாங்க TIGER இங்க டைகர் னு படிக்கனுமாம் ஐ க்கு இங்க ஐ சவுண்டாம் TIN இங்க டின் னு படிக்கனும்மாம் இங்க ஐ க்கு இ சவுண்டாம்.... இந்த " I" யையே எப்படி மாத்தி மாத்தி சொல்றாங்க பாரு இப்படி எத்தினியோ இருக்கு அதான் அப்படி சொன்னேன்"


"??????"
4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!