செவ்வாய், ஜனவரி 13, 2015

முப்பொங்கல்..... நகைச்சுவைப்பொங்கல்

 “பொங்கல் இனாம் குடுப்பார்னு தலைவர் வீட்டுக்குப்போனது தப்பாப்போச்சு”
“ஏன்?”
 “ஒரு தட்டுல பொங்கல் போட்டுகொடுத்துட்டு இதான் பொங்கல் இனாம்னு சொல்லிட்டார்.”

.....................................................................
“எனக்கு ஒண்ணும் புரியல சார்”
 “ஏன் என்ன ஆச்சு?”
“சர்க்கரைப்பொங்கல் இருக்கு வெல்லப்பொங்கல் இருக்கு ஏன் வெண்பொங்கல் கூட இருக்கு இதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லாம எல்லாரும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்து சொல்றாங்களே அந்த பொங்கல் ல என்ன போட்டு செய்வாங்க?”
................................................................................................................
“தலைவர் பொங்க காசு கொடுப்பார்னு நினைச்சு பால் பொங்குச்சான்னு கேட்டது தப்பாப்போச்சு”
“ஏன் என்ன ஆச்சு”
“பால் பொங்கி எல்லாம் வழிஞ்சுப்போச்சுனு நானே பொண்டாட்டிகிட்ட திட்டுவாங்கினு இருக்கேன் போடானு துரத்தி விட்டுட்டார்”
....................................................................................................................
“அவசரப்பட்டு இன்னைக்கு பொங்கல் கொண்டாடிட்டியே நண்பா?”
“ஏன்டா எல்லாரும் இன்னைக்கு தானே தைப்பொங்கல் கொண்டாடுறாங்க”
“உனக்கெல்லாம் நாளைக்கு ஸ்பெஷலா கொண்டாடுவாங்களே”
நண்பன்: ???

..................................................................................................................................
“பொங்கல்னு தானே சொல்லனும் அது என்ன நீங்க பொங்கல்கல் அப்படினு தப்பா சொல்றீங்க “
“ பொங்கல் ல ஒரு கல்லு இருந்தா பரவாயில்ல ஏகப்பட்ட கல் இருக்கே அதான்”
மனைவி:- ???
.....................................................................................................................................................
"அது என்னங்க டிராக்டர் பொங்கல் ? "
அந்த காலத்துல மாடு உழுதுச்சி அதனால மட்டுப்பொங்கல் கொண்டாடினாங்க... இப்ப எல்லாம் டிராக்டர் தானே உழுதுஅதனால் தான் டிராக்டர் பொங்கல் கொண்டாடுறோம்.
"???"
(வாஸ்தவமான பேச்சு)
..............................................................................
கவிப்பொங்கல்


வறுமைக்கோடு


ஓடி ஓடி உழைத்து
ஏமாந்துப்போனான்
உழவன்.
எவனோ கிழித்த
இந்தக்கோட்டை
இன்னும் தாண்ட முடியவில்லை.
........................................................................

கரும்பு விற்ற காசு

இனிக்கும் கரும்பை
விற்று விட்டு
வீட்டில்
வரவு செலவு பார்க்கும்போது
கசக்கிறது
கரும்பு விற்ற காசின்
கணக்கு.


வேட்டி புடவை

மூட்டை மூட்டையாய்
என்னைவிற்று
விற்ற காசில்
வட்டியும் அசலும் போக
வாங்கி வந்தாயடா
வேட்டி புடவை-
ஓசியில்
ஊராட்சி அலுவலகத்தில்.
நெற்கதிர்கள்
நாணத்தில் தலைகுனிந்துக்கொண்டன
நொந்துபோனாயடா
நல்லேர் உழவா.
........................................................................................

நல்லவிளை(லை)ச்சல் 

விற்று விட்ட விளைநிலத்தில்
வளமாகத்தான்
வளர்ந்து நிற்கின்றன...
வியப்புடன்
வேடிக்கை பார்த்தான்-
வானுயர்ந்த கட்டிடங்களை.
.......................................................................
கதைப்பொங்கல்

சென்றவருடம் பதிவான கதை.


                                    வாழ்த்து:-

நீங்குக துன்பம்
ஓங்குக செல்வம்
தங்குக இன்பம்
பொங்குக மகிழ்ச்சி.
அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். 

12 கருத்துகள்:

 1. நகைச்சுவைகள் அனைத்தும் ஸூப்பர் நண்பரே...
  கரும்பு விற்ற காசு கவிதை அருமை
  இனிய பொங்கல் - கள்- வாழ்த்து - கள் - நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏரோப்ளான் பிடிக்காமலே எம்புட்டு வேகமா வாறீங்க. மிக்க நன்றிங்க தோழா.

   நீக்கு
 2. முப்பொங்கலில் இனிப்பு ரொம்பத்தான் ஓவர் :)
  த ம 2 (மறக்காமல் போட்டுட்டேன் )

  பதிலளிநீக்கு
 3. பொங்கல் சிறப்புச் சிரிப்புக் கொத்தும்
  கவிதைகளும் தித்திப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் அருமை. அதிலும் பொங்கலுக்கு மறு நாள் கொண்டாடப்படும் பொங்கலை நண்பனை கொண்டாட சொன்னது அருமை.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 5. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 6. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!