செவ்வாய், ஜனவரி 27, 2015

டாக்டர் VS நோயாளி
டாக்டர்:- உங்க கிட்னியில கல் இருக்கு

நோயாளி:- நல்லா டெஸ்ட் செஞ்சுபாருங்க டாக்டர்....அவரசபட்டு உடைச்சி எடுத்திடாதீங்க ....... வைரக்கல்லு ரத்தினக்கல்லு அதுமாதிரி ஏதாவதா இருக்கப்போகுது...

டா:- ???

...................................................
 
டா:- உங்க இதயத்துல சின்னதா ஓட்டை இருக்கு

நோ:- இத மொதல்ல அறிவுகெட்ட என் பக்கத்துவீட்டுக்காரன்கிட்ட சொல்லுங்க டாக்டர்.

 டா:- ஏன்

நோ:- அவன் அடிக்கடி உனக்கு இதயமே இல்லைடா அப்படினு திட்றான் சார்.

டா:- ???
................................................................................................................

 
அந்த டாக்டர் முன்னாடி போலீஸ்காரரா இருந்து இருப்பாரோ?

ஏன்

முட்டிக்கு முட்டி தட்டறாரே.

யோவ் நரம்பு டாக்டர் அப்படித்தான் செக் பண்ணுவார்
.........................................................................................................................
 
ஆப்ரேஷன் தியேட்டருக்கு முன்னாடி ஏன் வக்கீல் ரூம் போட்டு உட்கார்ந்து இருக்கார்

 ஆப்ரேஷன் செய்யறது முன்னாடியே முன்னெச்சரிக்கையா உங்க சொத்துபத்து செட்டில்மெண்ட் ரெடி  பண்ணி எழுத தான். அப்புறம் பிரிச்சு கொடுக்கிறது நீங்க இருக்க மாட்டீங்க பாருங்க அதனால தான்.
......................................................................................................................
 
அவரு போலி டாக்டர்னு எப்படி கண்டிபிடிச்ச

 மாவுகட்டு எதுல போடுறது அரிசிமாவுலயா இல்ல உளுத்தம்மாவுலயா னு நர்ஸ்ஸை கேக்கிறாரே.
........................................................................................................................... 

8 கருத்துகள்:

  1. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. டாக்டர் ஜோக்ஸ் ஸ்பெசலை ரசித்தேன் !
    த ம 3

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!