சனி, ஜனவரி 10, 2015

மனிதம் தொலைத்த மானுடங்கள்

தெருவெங்கும் முகங்கள்...
தவறிகூட கவனிக்க
தயாராக இல்லை...
தெரிந்தவர் எவரேனும் வருவாரோ
தேவையாய் இருக்கிறது ஒரு துணை
தேடிக்கொண்டிருக்கிறேன்.....


முகமெல்லாம் சிரிப்பாய் சிலபேர்
இறுகிய இரும்பு முகத்தினர் சிலபேர்
செல்லில் சிணுங்கிச்செல்வோர் பலபேர்
பேரம் பேசியபடி பலபேர்
ஏட்டிக்குப்போட்டியாய் பேசியபடி
எகத்தளம் பேசியபடி
சிந்தனை சிரத்தையுடன் சிலர்
........
............................
...........................................
அப்பாடா தெரிந்தவன் வருகிறான்
கூடபடித்தவன்
டேய் என்னடா இங்க நிக்கிற
ஒரு போன் பண்ணமாட்டியா
பேஸ் புக்ல ஆளையோ காணோம்
அட....
அவசரமாய் போறேன்
அப்புறம் பாக்கலாம்....
நான் வாய் திறப்பதற்குள்
தலைமறைவாகிப்போனான்.

மாமா தானே அது...
என்ன மாப்ளே! மசமசனு....
எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வா
கொஞ்சம் அவசரம்......

இப்படியாக
தெரிந்தவர்கள் எல்லாம்
தலைமறைவாகிட
திகைத்து நின்றேன்.

அங்கே, என்னருகில்
அடிபட்டு கிடந்தவனை
அருகில் இழுத்துப்போட
இன்னும் ஒருவரும் சிக்கவில்லை
108க்கு போன் போட்டுவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன்

மனிதம் தொலைத்த
மானுடங்களை
நொந்தபடி.4 கருத்துகள்:

 1. மனிதம் தொலைச்ச மானுடங்கள்! ஆம் உண்மையை உரைக்கும் வரிகள். எதைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று வியப்பாக இருக்கின்றது....மனதைத் தொட்ட வரிகள்!

  பதிலளிநீக்கு
 2. அடிபட்டவனும் அப்படித்தான் இருந்திருப்பான் !
  த ம 2

  பதிலளிநீக்கு
 3. மனிதம் தொலைத்த மானுடங்கள் அருமை நண்பரே...
  தமிழ் மணம் 3
  எனது மோதகமும், அதிரசமும். காண்க....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!