ஞாயிறு, டிசம்பர் 14, 2014

முத்தப்போராட்டம்




அடுத்தவர்கள்
பார்க்கிறார்களே என்ற
ஆறறிவு இல்லாமல்
மிருகங்களைப்போல
மனிதர்களும்.



பெத்த வயிறு பத்தியெரிய வேண்டாமா?
பரதேசிகள் நடுரோட்டில்
நாய்களைப்போல
நக்கிக்கொள்வதைப்பார்த்து.


சும்மா இருக்க எப்படி முடிகிறது
சூடு சுரணை இல்லாத
அவர்களின்
அப்பா அம்மாக்களால்-
சுட்டுப்போட வேண்டாமோ?.



இந்திய குடும்ப கலாச்சாரம் பார்த்து
அசந்துகிடக்கின்றன
அகில நாடுகள்.
அசிங்கப்பட வைக்கும் இந்த
அநியாயங்களை 
அடக்கி ஒடுக்க வேண்டாமா?
அரசியல் சட்டம்.


மூணு வயசு பொண்ணுகூட
முத்தம் கொடு என்றால்
வெட்கப்படும். 

கையை பிடித்தாலே கெட்டுப்போனதாய்
இருந்த இந்திய கலாச்சாரத்தின்
மரபுகளை மலையேற்றி விடுவார்கள்
மானங்கெட்ட இந்த இழிபிறவிகள்.

இவனுக்கு முத்தம் கொடுத்து
எவனை கட்டிக்கொள்வர்கள்
இதன் பெயர் என்ன?
.................................................


இனியும்
இப்படியேப்போனால்...
அடுத்தக்கட்டப்போராட்டத்திற்கு
கட்டிலோடு கிளம்பி விடுவார்கள்.

எல்லாத்தையும் டுவிட்டும்
வெண்தாடிவேந்தர்
வேடிக்கைப்பார்க்கிறாரா?.......


முத்தப்போராட்டம்
மொத்தமாய்
வேட்டு வைக்கப்போகிறது....
இந்தியாவிற்கு-
விழித்துக்கொள்ளாவிட்டால்.
.................................................................................................................................................................
 பின் குறிப்பு:-
தயவுசெய்து அனைத்து பிரபலபதிவர்களும் உங்களுக்கு விருப்பமிருப்பின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 
அனைவருக்கும் 'கனவில் வந்த காந்தி' போல இதுவும் வரட்டுமே ஒரு சுற்று.
"முத்தப்போராட்டம்"
ஒரே தலைப்பில் அனைவரும் எழுதுவோம்
யாராவது திருந்தினால் ஒரு நன்மை தானே. 
நான் எல்லோரையும் அழைக்கின்றேன் நீங்கள் விரும்பியவர்களை அழைத்து எழுதச்செய்யுங்கள் ... வணக்கத்துடன் உங்கள் அன்பன்.

 

11 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரர்
    கை கொடுங்கள். சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் காணும் போது அதற்கு எதிராக பொங்கி எழுபவன் தான் படைப்பாளி. அந்த வகையில் அழுத்தமாகவே எதிர்த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இழிசாதி என்னும் இடத்தில் தான் உறுத்துகிறது. சாதி நமக்களுக்கு? இழி பிறவி என்று மாற்றிக் கொண்டால் நலமாக இருக்கும். அன்பு கூர்ந்து கவனிக்க. சிறப்பான எதிர்ப்பு குரல். நானும் இணைகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றிகள் சகோதரர். தங்களின் கருத்திற்கு இணங்க சாதி என்பதை பிறவி என்று மாற்றிவிட்டேன். ஆலோசனைக்கு மிக்க நன்றிகள். தாங்களும் கடிந்து எழுதுங்கள்.

      நீக்கு
  2. சாதி நமக்கெதுக்கு என்று படிக்கவும். தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் ஆதங்கம் புரிகிறது.
    நீங்கள் சொல்கிற மாதிரி
    "//அடுத்தக்கட்டப்போராட்டத்திற்கு
    கட்டிலோடு கிளம்பி விடுவார்கள்//"
    இதுவும் ஒரு நாள் நடக்கப்போகிறது. கலிகாலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நடந்தாலும் நடக்கும். இப்படியே விட்டுவிட்டால். தாங்களும் எழுதுங்கள்.

      நீக்கு
  4. நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் சொல்வதும் சரிதான்
    இப்படியே விட்டுவிட்டால் அடுத்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் அய்யா.தாங்களும் எதிர்ப்புக்குரல் கொடுங்களேன்.

      நீக்கு
  5. சமூகம் சீரழிந்து விட்டது என்பதை உறுதி செய்கிறது இது போல் கேடு கெட்ட செயல்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக அய்யா. தாங்களும் கடிந்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  6. ஆதங்கத்தை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!