சனி, செப்டம்பர் 20, 2014

கத்தி...( கதை)




ய்யா....துபாய்......... (வெளிநாட்டிலிருந்து) மாமா நாளைக்கு ஊருக்கு வர்ரார். 

ஓ! அப்படியா? வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வைக்கனும். அந்த நாட்டுல இருக்கிற சுத்தம் இங்க இருக்குமா? கொஞ்சமாவது நாமளும் டிசண்டா இருக்கிற மாதிரி காண்பிச்சிக்க வேண்டாமா?.
.நான்.

 வீடு அல்லோகலப்பட்டது சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று அனைவருக்குள்ளும் சண்டை வந்தது தான் மிச்சம். உன் பொருள் தான் அப்படியே கிடக்கு இல்லை இல்லை உன்னோடதுதான் அது.......பிள்ளைகளுக்குள் சண்டை.....

 என்ன வீடு வச்சிருக்கே எங்கப்பாரு துணிமணிகள் த்தூ... கணவன் மனைவிக்குள் சண்டை.

ஆமாண்டா நீ பாட்டுக்கு ஊரை சுத்திகிட்டு இரு..... ராத்திரி 11 மணிக்கு வீட்டுக்கு வா.... இங்க எப்படி எல்லாம் ஒழுங்கா இருக்கும்...அம்மா மகனுக்கும் சண்டை....

டேய் அவன் வந்தா என்ன.... உங்களுக்குள் என்ன சண்டை  நடக்கிறது எல்லாம் எப்படியோ..... இதை எல்லாம் பார்த்தா நடக்குமா?....
எனக்கு ஒன்னும் புரியல.... அப்பா மகன் மகள் மனைவி...அனைவரும் கத்தி கத்தி... கத்தி.... கூப்பாடுப்போட்டு...
எப்படியோ .....
சண்டையும் சச்சரவுமாக வீடு கொஞ்சம் சுத்தமானது என்னவோ உண்மை.

 கணவன்:- “உங்க அண்ணனுக்கு எத்தனி நாள் லீவாம்?” 
மனைவி:- “ரெண்டு மாசம் “
கணவன்:- “பரவாயில்ல இந்த தடவையாவது முழுசா லீவ் கிடைச்சுதே”

நேத்து ராத்திரி....மாமன் ஊரில் இருந்து வந்துவிட்டார்.....

பையன்:- மாமா எனக்கு என்னமா வாங்கி வந்திருக்கும்?
“தெரியலடா போய் பாக்கலாம்”
 பொண்ணு:- “என்னமா மாமா நம்ம வீட்டுக்கு இன்னும் வரல”
ஒரு வாரத்துக்கு பிறகு என் மனைவி மட்டும் போய் பார்த்து விட்டு வந்தாள்.

இன்னும் ரெண்டு நாள்ல  மாமா நம்ம வீட்டுக்கு வருகிறாராம்.
மீண்டும் வீடு  சுத்தம் பண்ணுகிற வேலை..... 

அந்த நாட்டுல இருக்கிற சுத்தம் இங்க இருக்குமா? கொஞ்சமாவது நாமளும் டிசண்டா இருக்கிற மாதிரி காண்பிச்சிக்க வேண்டாமா?..
பழைய புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி. 

மீண்டும் கத்தி கத்தி அனைவரிடமும் சண்டை போட்டு எப்படியோ பாதி காரியத்தை சாதித்துக்கொண்டாள்.

“ வருவார்டி ஊர்ல கொஞ்சம் வேலையாம்”

ஒருவாரம்............ ..இரண்டு வாரம் ............. ஒரு மாதம்20பது நாட்களுக்கு மேல் ஆனது....மாமாவோட லீவே முடியப்போகுது. ஒரு நாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வாயேன் சொல்லிவிட்டு வர..... என் மனைவி மீண்டும் போய் பார்த்துவிட்டு வந்தாள். 

500 ரூபாயை கையில் கொடுத்து..... இந்தாமா நான் ஊருக்கு வர முடியல... அடுத்தமுறை லீவ் வந்தா அவசியம் ஊருக்கு வருகிறேன் என்றாராம் அண்ணன். 

 மகனும் மகளும்.............. மாமா நமக்காக ஏதாவது வாங்கி வருவார் என்று ஏக்கத்தில் இருக்க.....சிறு பிள்ளைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் வந்தது. அவளின் வார்த்தை எனக்கு என்னவோ போல் இருந்தது. 
பணமா ? பாசமா?.... இருக்கிறவனும் அப்படித்தான் இருக்கிறான் இல்லாதவனும் அப்படித்தான் இருக்கிறான்......எண்ணங்கள் ஏதோதோ ஓட....
எனக்கு மூஞ்சில் அடித்தார்போல் ஆயிற்று.
 இந்த காசு இல்லாமலா நாம காத்திருந்திருந்தோம் அவன் மூஞ்சிலேயே விட்டு எறிஞ்சுட்டு வராம அதை தூக்கினு வர்ர... நான் கத்தி கூப்பாடுப்போட..... அனைவரும் கப்சிப்.

கோபத்தில் அவள் காசை தூக்கி எறிய......

 காற்றில் படபடத்தது.... எங்கள் பாசமும் அந்த பணமும்.

தண்ணீர் குவளையை தேடி என்  பார்வை சென்றது. 

கத்தி கத்தி தொண்டை வறண்டதால். 

( எனக்குத்தெரிந்த ‘ கத்தி ’ கதை இது தாங்க. கதை எப்பூடி? )

8 கருத்துகள்:

  1. வீடு சுத்தமாச்சு,மாமா மனசுதான் சுத்தமில்லை போலிருக்கு !
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. கொடுத்து கொடுத்து ஓஞ்சு போயிருப்பாரு..மாமா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் அய்யா...கொடுப்பது இல்லை ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு போய் இருக்கலாம்.... நமக்கு கத்தி தான் முக்கியம்.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. கத்தி கத்தி தொண்டை வரண்டது தான் மிச்சமா ?

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை நண்பரே! பல சமயங்களில் வெளி நாட்டிலிருக்கும் னெருங்கிய உஅறவினர்கள் நம் வீட்டுக்கு வருவது இல்லை என்பதுதான் நிசர்சனாமான உண்மை! உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே வருவார்கள்!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!