திங்கள், செப்டம்பர் 22, 2014

டிஞ்சர் வச்சி பஞ்சர் ஒட்டினா....“அந்த டாக்டர் சரியான டிவி பைத்தியம்னு எப்படி கண்டுபிடிச்ச?”

“ ‘ சித்த’ வைத்தியர்னு போர்ட் போடுவதற்கு பதிலா ‘சித்தி’ வைத்தியர்னு போர்ட் வச்சி இருக்கிறாரே “

" ??? "

...................................................................................................................................................
“ அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி கிரிக்கெட்ல பௌலிங் கோச்சா இருந்திருப்பார்னு எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச ” 

“ மாத்திரையை தூர தூக்கிப்போட்டு வாயால கேட்ச் பிடிங்க பார்ப்போம்னு சொல்றாரே “
.................................................................................................................................................
"அந்த டாக்டருக்கு ஜோசியத்து மேல அசைக்க முடியாத நம்பிக்கை “
எப்படிச்சொல்றீங்க?"

“சனி பிணம் துணைதேடும்னு சனிக்கிழமை அன்னைக்கு ஆப்ரேஷனே பண்ணமாட்டார்னா பார்த்துக்கோங்களேன்”
............................................................................................................................


"அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி டிவி சீரியல் டைரக்டரா இருந்திருப்பார் போல இருக்கே அப்படினு எப்படி சொல்றீங்க? “

“ ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதி கடைசியில இது கதையல்ல நிஜம்னு எழுதி கையெழுத்து போடுறாரே “
...........................................................................................................................................


“ அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி சைக்கிள் ரிப்பேர் கடை வச்சிருந்த ஆளுனு நல்லா தெரிஞ்சுப்போச்சு “

“ எப்படி? “ 

“சிஸ்டர்கிட்ட அடிபட்டு இரத்தம் வருவதை நிறுத்த டியூப்,சொலியுஷன், தீத்து கட்டை எல்லாம் எடுத்துனு வாங்க, டிஞ்சர் வச்சி பஞ்சர் ஒட்டினா இரத்தம் நின்னுடும் அப்படினு சொல்றாரே “
............................................................................................................................................
" அந்த டாக்டர் விஜய் யின் தீவிர ரசிகர்னு எப்படி அடிச்சு சொல்றீங்க?" 

"தான் ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட் என்பதை 'கத்தி'
ஸ்பெஷலிஸ்ட் னு போர்டை மாத்தி வச்சிட்டாரே"
...............................................................................................................................................


“அந்த டாக்டருக்கு ரொம்ப இளகிய மனசு”  

"எப்படி சொல்றீங்க?" 

"ஆப்ரேஷனுக்கு  ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல் ஐ சி யில ஃப்ரியா பாலிசி எடுத்து தந்திடுவார் "
.........................................................................................................................................


“தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் “-
-நன்றி தினமலர் - 22.09.2014.- 

4 கருத்துகள்:

 1. #“தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் “-#
  இதில் நீங்கள் ஏழு டாக்டர்களை அடையாளப் படுத்தி இருக்கிறீர்கள் .அவர்களின் விலாசத்தைச் சொன்னால் உள்ளே தள்ள வசதியாயிருக்குமே ?
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. அட அட அட....சரவெடி இப்படிக் கொளுத்திப் போட்டா....ஹாஹாஹா....

  வாங்க நாளை வலைச்சரம் பக்கம்.....கொஞ்சம் எட்டிப்பாருங்க நண்பரே!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!