புதன், ஆகஸ்ட் 20, 2014

இதய நூலில்...

தாடிக்குள் ஒளிந்திருக்கும் சோகங்கள் அதிசயம்.!
.செடிகளுக்கிடையே
சிரித்த ரோஜாவாய் நீ!
நட்சத்திரங்களுக்கிடையே
நகரும் நிலவாய் நீ!

காற்றினூடே வீசும்
தென்றலாய் நீ!
வாசல்களுக்கிடையே
வண்ணத்தோரணமாய் நீ!
மானுடர்களுக்கிடையே
மனித தேவதையாய் நீ !
வித்தியாசமாய் நீ இருந்து
விழிபிதுங்க வைக்கிறாய்.
...............................................................
நிலவுக்கும் ஆசைதான்
நீ
ஓடி வா என கூப்பிட்டவுடன்
ஓடிவர.
பூமிக்குள்ளே
நிலாபோல் வலம் வரும்
நின்
முகத்தைப்பார்க்க.
கொஞ்சம் பயம்-
பிரபஞ்சங்கள் பாதிக்கப்படுமோ என்று.
.........................................................................................................
என்
சிந்தனைகளையெல்லாம்
சிறைப்பிடித்தன உன்
சின்ன சிரிப்பு.
.........................................................
வேர்கள் இருக்கும் வரை
விழுதுகளுக்கு பயமில்லை.
விதையாய்
வேராய் நீ இருக்க
என்னில்
காதல்
மரமாய் மலர்கின்றது
விழுதாய் விரிகின்றது.
.............................................................................
என் இதய நூலில்
எழுதி வைத்த
உன் பெயரை
எவர் கேட்டபொழுதும்
ஏனோ வெளியே சொல்ல
வெட்கப்படுகிறது
என் மனம்-
உன்னைப்போல.
.......................................................................................


6 கருத்துகள்: