செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

கதம்பச்சோறு.கடவுள்:- “பக்தா, உன் பக்தியை மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன் “

பக்தன்:- “ இங்கிருந்து நிலாவுக்கு ரோடு போட்டுத்தாங்க. நான் டூவீலரிலே நிலாவுக்கு போகனும் “

கடவுள்:- “அய்யய்யோ இது கொஞ்சம் கஷ்டமாச்சே “ 

பக்தன்:- “அப்ப சரிங்க, என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் நடக்கும் மாமியார் மருமகள் சண்டையை தீர்க்க என் மனைவியை நான் சொல்றபடியெல்லாம் கேட்க வைங்க, இனிமே அவ என்கூடக்கூட வாயாடக்கூடாது “


கடவுள்:- “ஆமா, நிலாவுக்கு தார்ரோடு போடவா? இல்ல சிமெண்ட்ரோடு போடவா?”
...............................................................................................................

பிள்ளைகளின் படிப்பில் நாமும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டியுள்ளது,

 படங்கள் வரைவது பிள்ளைகளுக்கு கொஞ்சம் இஷ்டம் தான் ஆனால் தனி நபரை வரைதல் என்பது கொஞ்சம் எல்லோருக்கே கஷ்டம் தான், பக்கா ஓவியர்களைத்தவிர. சரியாக வரையவில்லை என்றால் வேடிக்கை கூத்தாகிவிடும். கார்ட்டூன் போலாவோ அல்லது யார் என்று கண்டு பிடியுங்கள் என்று போட்டி வைக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். ஆசியர்கள் இதனை தவிர்த்தால் நாம தப்பிக்கலாம். இல்லையேல் நான் வரைந்த ஓவியங்கள் (?) போல் ஆகிவிடும்.
மாதிரிகள்:-

  

யார் இவங்கணு கொஞ்சமாவது தெரியுதா?
.............................................................................................................................
படித்ததில் பிடித்தது:-
                     உற்ஸவர் திருவீதி எழுந்தருளல், கிறித்தவர்களின் தேர்பவனிகள் ஏன் கொண்டாடப்படுகின்றன என்றால் கோவில்களுக்குச்சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அருள்புரிவதற்காக கொண்டாடப்படுகிறது.
..............................................................................................................................

 

11 கருத்துகள்:

 1. கடவுள் ஜோக் அருமை! கடவுளுக்கே கூட சவால் விடும் மாமியார் மருமகள்கள்! ஹாஹாஹா....

  சூபர வரைஞ்சுருக்கீங்க ! முதல் படம் பாரதியார்......இரண்டாவது...ம்ம்ம்ம்...ஏதோ ஒரு அரசன் என்று தெரியுது....ராஜராஜ சோழன் இல்லை....ஏன்ன முகம் மொழி நன்றாக இருந்தாலும், கொஞ்சம் உடல் மொழி குறைகின்றது....பாரி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முத்தான முதல் கருத்திற்கு மிக்க நன்றிகள் அய்யா. இரண்டாவது படம் ஒரு அரசர் அவ்வளவே. மிக்க நன்றிகள் பல.

   நீக்கு
 2. கடவுள் நகைச்சுவை அருமை அவர் அனுபவசாலி வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதை அறிந்தவர் அதனால்தான் ரோடு போட்டுத்தர சம்மதித்து விட்டார் எப்படியோ ? உங்களாலே என் ஆசையும் நிறைவேறப்போகுது என்னுடைய சைக்கிளுடன் நானும் தயார்.

  பசம் மருதி பாண்டியரின் தம்பி என்று நினைக்கிறேன். சரியா ? நண்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

   அரசர் என்று தான் வரைந்தேன். அவரின் சாயல் இருக்கலாம். மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 3. சித்திரமும் கைப் பழக்கம்தானே ,முயற்சி செய்தால் எங்களுக்கு ஒரு ஓவியர் கிடைப்பார் போலிருக்கே !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லா வரைஞ்சிக்கிட்டு இருந்த நான் இப்படி ஆயிட்டேன், போட்டி வைக்கும் அளவுக்கு(?). வரைதலை கொஞ்சநாள் விட்டதால் இந்த சோக நிகழ்வு.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!