புதன், ஜூலை 02, 2014

சின்ன சின்ன..


வழியனுப்பு விழா
 
‘ஆர்குட்டு’க்கு  ஆயுசு
அவ்வளவுதான்.
அதனைப்படைச்ச 
ஆண்டவன் கட்டளை.


போய்சேரப்போகிறது
இன்னும் சில நாட்களில்.
எல்லாம் நிறைவேறிற்று.


சவ ஊர்வலம்
சாலையெங்கிலும் பூக்கள்
வந்தவர்
மீண்டும் போன வழி.

தூக்கம்
செத்து செத்து
விளையாடலாம்
வாங்க.

காதல்
எதையாவது
எழுத நினைக்கையில்
விதையாக நீ இருப்பதுதான்
விந்தை.

 புதிய பாதைகள் தேடு

உனது ஒவ்வொரு நடையும்
புதியன தேடட்டும்.
உனது பாதச்சுவடுகள்
ஈரமணலில் காலடித்தடம்போல
ஆழப்பதியட்டும்.
புதியன இல்லாதைவைகள்
இன்று புரம்தள்ளப்படுகின்றன
என்பதினை நீயறியாயோ?
புதிய பாதைகள் தேடு
புதியன விரும்பு.
புதுயுலகம் படைத்திடு
புலரட்டும் வாழ்க்கை.



 மன்னர் ஆட்சி
ஆண்டவர்கள் 
மாண்டுப்போனார்கள்
அத்தாட்சியாய் 
அங்கும் இங்கும் உடைபட்ட
அரண்மனை.
 

9 கருத்துகள்:

  1. கதம்பமான கவிதை அருமை, நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. சீரிய சிந்தனையில் விளைந்த
    கவிதைகள் அனைத்தும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை...

    Blogger போகாமல் இருந்தால் சரி...!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதைத் தொகுப்பு...மனிதனின் ரசனையோட்டம் மாறிக்கொண்டே இருக்கிறது எனபதற்க்கு ஆர்குட்டின் வீழ்ச்சி ஓர் நல்ல உதாரணம் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. #எதையாவது
    எழுத நினைக்கையில்
    விதையாக நீ இருப்பதுதான்
    விந்தை.#
    விதை கவிதை ஆவது விந்தையிலும் விந்தை !
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே மிகவும் ரசிக்கும்படி உள்ளது! அருமை!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!