புதன், ஜூலை 09, 2014

அம்மா பலகை



இணையம் என்னும் போதை........
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என கேட்பது கேட்கிறது....
யாருமே கேக்கலைனாலும் நாமா சொல்லி ஒரு பில்டப் கொடுக்க வேண்டியது தான்

ஹ.....ஹா....வணக்கம் உறவுகளே !
ஒரே ஒரு வாரம். விக்கிரமாதித்தனின் தலையை போல் வெடித்துவிடும்போல் இருந்தது. என்ன செய்வது வேறு வழியில்லை என்றான பின்னர் கம்முனு சும்மா கிடக்கவேண்டியாதாகிப்போய்விட்டது. ஆம் கம்பியூட்டர் பழுதாகிவிட்டது.
எல்லாம் நன்மைக்கே !

 சில நாட்கள் இணையம் இல்லாமலேயும் சுகமாய் இருந்தது.
ஆனால் இது  இருந்தாலும் பிரச்சனை, இல்லாவிட்டாலும் பிரச்சனை....இணையம் தான்.

இணையம் பயன்படுத்தா நாட்களில் என்னவோ போல் இருந்தது.எதையோ பெரியதாக இழந்துவிட்ட உணர்வு.......அப்படி ஒன்றும் இழப்பில்லை என்பது போக போக புரிகிறது ஆனாலும் ???.....

ஆம் இதுவும் ஒரு போதை என்பதை பிறர் கூறும்போது சிரித்த நாம், நாம் அதனை அனுபவிக்கும்போதுதான் தெரிகிறது.... சும்மாவா சொன்னார்கள் “தலைவலியும் வயிற்றுவலியும் தனக்குவந்தால் தான் தெரியும்” என்று
பழமொழிகள்....... "இண்டல் உள்ளே மெண்டல் வெளியே" புது மொழி....ஆகியவை

 நிச்சய அனுபவ உண்மைகள் என்பதை உணர வைத்த வாரம்.நன்றி......
 

எனது கணினியில் ‘அம்மா பலகை’ பழுது....
தமிழ் நாட்டுல இருந்துகிட்டு ‘மதர்போர்ட்’ பிரச்சனை என்று சொன்னால் நல்லாவா இருக்கும்.... அதான் இதனின் தமிழாக்கம் ‘அம்மா பலகை’................ என்று கூறலாமா? கணினி வல்லுனர்கள்  மற்றும் தமிழரிஞர்கள் மன்னிக்கவும். அம்மா உணவகம்..... அம்மா மருந்தகம்....இப்படி பலவும் ‘அம்மா’ மயமாகிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் இனி மதர்போர்டை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்றால் நாங்கள் பொறுப்பல்ல.
இன்னும் எத்தனை நாள் ஆகும் பிரச்சனை தீர என்று தெரியவில்லை அதற்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தவர் கணினியில் இருந்து....... இது ஒரு திருட்டு பதிவு.
இணைப்பதால்
இதனை இணையம் என்றோம்
இணைந்திருப்போம்
இரு சிறகுகள் விரிப்போம்
இதய வானில்
இனிய உறவுகளால்
இனிதே உலாவுவோம்.!

தோழி1:- “உங்க லவ்வர் பெரிய இன்கம்டேக்ஸ் ஆபிஸரா இருக்கலாம். அதுக்காக பீச்சுல சுண்டல் விக்கிறவனை இன்கம்டேக்ஸ் கட்டணும்னு சொல்லி பிளாக்மெயில் பண்ணி சுண்டல் வாங்கி சாப்பிடுவது கொஞ்சம் கூட நல்லா இல்ல”

தோழி2:- ???

(இமெயில் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே பிளாக்மெயில் பண்றத கண்டுபிடிச்சது யாருங்கோ?)
............................................................................................................................................................
நீதிபதி:- “இந்த வழக்கின் தீர்ப்பின் மீதி நாளைக்கு வழங்கப்படும்”
“என்னங்க நீதிபதி இப்படி செஞ்சுட்டார்”

“என்ன ஆச்சு?”

“அட நீதிபதி...... நீதி பாதி யை நாளைக்கு சொல்ரேன்னு இப்படி ஒத்தி வச்சுட்டாரே!”

(வழக்கறிஞரின் வாய் தா எனக்கேட்டுக்கொள்வதால் அடிக்கடி வழங்கப்படுகிறதோ ‘வாய்தா’)
....................................................................................

8 கருத்துகள்:

  1. உண்மை தாங்க. இணையம் ஒரு போதைன்னு கண்டிப்பாக ஒத்துக்கிட்டே ஆகணும்.

    மதர்போர்டுக்கு - அம்மா பலகை என்று தமிழாக்கமா!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

      நீக்கு
  2. சுண்டலுக்கு பிளாக் மெயில் பண்றவனைக் கட்டிகிட்ட லைப் என்னாகும்னு தோழிகிட்டே யோச்சிச்சு முடிவெடுக்கச் சொல்லுங்க ஜி !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுண்டல் வாங்கி திண்ணத கிண்டல் பண்ணுவாங்களே..பின்னாடி.

      நீக்கு
  3. போதை என்பது உண்மையாயினும் நமக்கு அவசியமானதாகி போய்விட்டதே நீங்களும், நானும் நண்பரானது எப்படி ? எல்லாம் நன்மைக்கே நண்பா...

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா ஜோக்குகள் அருமை! அம்ம பலகை என்றவுடன் அம்ம உணவகம், அம்மா மருந்தகம் அப்படின்னு வந்ததுனால, கல்விக்கூடங்களில் உள்ள கரும்பலகைக்கும் அம்மா பலகை என்று வந்துவிட்டதோ அப்படின்னு நினைச்சோம்....மதர்போர்ட் க்குதான் அப்படினு உங்க விளக்கம் அருமை!

    இணையம் போதைதான்...ஆனால் இனிய போதை....எத்தனை நல்ல உள்ளங்களை இணைய வைத்துளது, நல்ல நண்பர்களாக.....அறிவை வளர்க்கின்றது....நம்மையும் எழுத வைக்கின்றது...நாலு பேர திரும்பிப் பார்க்க வைக்கின்றாது.....நல்லதுதானே செய்கின்றது! இப்ப பாருங்க உங்க ஜோக்குகள் படித்து சிரிச்சோம்...இப்படி மனக் கவலை மறக்கச் செய்கின்றது....ஓ! அப்ப போதைதானோ?!?!!!!!

    பதிலளிநீக்கு
  5. போதைதான்
    ஆனாலும் உறவுகளை முகம் சுளிக்க வைக்கும் போதை
    சகோதர உறவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போதை அல்லவா
    தம 4

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!