வியாழன், ஏப்ரல் 24, 2014

காதலன் VS காதலி



கண்களால் கதைபேசி கைகளால் சைகைக்காட்டி
உடம்பினிலே உருக்குலைந்து பட்டான உடையுடுத்தி
பல்லழகாய் நின்றவனே!.

காலமெல்லாம் காத்திருந்தால் கலங்கிடும் நம்கண்கள்
காலமெதும்தாழ்த்தாது துணையாய் நாமும் சேர்ந்திடவே
காதலில் தொலைகின்றேன்!.

காற்றே உந்தன் காலடியில் காலமெல்லாம் காத்திருப்பேன்
புயலாய் நீயும் மாறாமல் புன்னகை பூக்கும்
இளந்தென்றலாய் சமாதான வார்த்தை சொல்லு!.

அன்பென்னும் சொல்லினிலே தங்கும்பல இன்பங்களே
அன்பு நம் வாழ்க்கையிலே அயராமல்  அலையலையாய்
அடிபாதம் தொட்டு செல்லட்டுமே!.

பூவே நீயும் வாடாமல் பூப்பாய் என்றும் என்மனதில்
வைரம் பாய்ந்த தண்டினிலே வளமாய்பூத்து செழித்திடுவாய்
நம் வாழ்க்கையது மனப்பந்தல் !.

மேகம் எனும் துகிலெடுத்து மழையாக வீசிகின்றாய்
அழகான தேன் தமிழில் சொல் அலகால் பாட்டெடுப்பாய்
மனச்சிறையில் கைதியாவேன்!.



செங்கமலர் அவள் சங்கமதில்
செந்தமிழ் பூத்திருக்க

மங்கை அவள் என் மனதில்
மணமேடை போடுகின்றாள்

சிங்கம் அவள் பேச்சினிலே
சிற்றாறாய் ஊற்றெடுக்கும்

செல்வம் அவள் மேனியிலே
செங்கரும்பாய் திரண்டுவரும்

சொல்லும் அவள் வார்த்தையிலே
சொற்றொடர்கள் சோர்ந்துப்போகும்

இன்பம் அவள் இதயத்திலே
இன்னிசை பாடிவரும்

பாசம் அவள் வாழ்க்கையிலே
பனியறையாய் உறைந்து நிற்க்கும்
நாணம் அவள் செயலிலிலே
நாணல் போல வளைந்துச்செல்லும்

வண்ண அவள் உடையினிலே
வானவில்லே தோற்றுப்போகும்

புரட்சி அவள் பார்வையிலே
புத்துணர்ச்சி கொண்டுவரும்

விழிகள் அவை விண்மீன்கள்
விடிவெள்ளி இன்ப வாழ்க்கையிலே !.


1 கருத்து:

  1. காதலன் ,காதலியை தமிழ் மணத்தில் சேர்த்து ,மொய்யும் செய்து விட்டேன் !
    வாழ்க மணமக்கள் !

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!