புதன், ஏப்ரல் 23, 2014

லூசா?... இல்ல.... கேசா?
“வணக்கம் டாக்டர்
“வாங்க உட்காருங்க
“ம் சொல்லுங்க
“உங்க பேரு என்ன “
“சாமி பேர சொல்லவா இல்ல கூப்பிடற பேர சொல்லவா டாக்டர்
“உங்களுக்கு பிடிச்ச பேர சொல்லுங்க
“போங்க டாக்டர் வெட்கமா இருக்கு “

என்னடா இது ரோதனையா போச்சு .....சரி சரி சாமிபேரே சொல்லுங்க
“எந்த சாமி சார் கிறிஸ்டினா இல்ல இந்துவா
டாக்டர் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு.....
“ஏங்க உங்களுக்கு வச்ச சாமி பேர சொல்லுங்க
“ஓ அதுவா வந்து அது எங்க குலதெய்வம் சார்
“ஓகே சொல்லுங்க
“கோவிந்தசாமி சார்
“ஓகே
“உங்க வயசு என்ன?
“போன ஆடி மாசத்தோட 23 இருக்கும் டாக்டர்
“ஆமா உங்களுக்கு கூப்பிடற பேரு என்ன?
“ஊர்ல கோவிந்து இல்லனா சாமி அப்படினு கூப்பிடுவாங்க சார்
“ஓகே என்னபண்ணுதுனு சொல்லுங்க?
“லேசா மனசு வலிக்குது டாக்டர்
“நெஞ்சு வலிக்குதுனு தானே சொல்லுவாங்க நீங்க என்ன இப்படி சொல்றீங்க
“நெஞ்சும் மனசும் ஒன்னு தானுங்களே“
“ஓகே ஒரு இசிஜி எடுத்து பாத்துடலாம்
“இந்தாங்க பண்ணிட்டு வந்திடுங்க “
“சரிங்க சார்
“நெக்ஸ்ட்
“பேஷண்ட் யாரும் இல்லீங்க சார்- இது நர்ஸ்.
“ ஓகே “
டாக்டர் மனதுக்குள்............
 யாராவது வர்ரதுக்குள்ள இந்த அங்கிரிபேட் அடுத்த ஸ்டேஜ் போயிடனும்
…………………………………………………………….............................................................


“டாக்டர் ரிசல்ட் வந்திடுச்சு “
“காமிங்க பாக்கலாம்
“எல்லாம் நல்லா தானே இருக்கு...நெஞ்சுவலிக்கு சான்ஸ்சே இல்லியே
“அப்புறம் ஏன் டாக்டர் வலிக்குது? நீங்க தான் கண்டுபிடிக்கணும்
“ஓகே, கண்டுபிடிச்சிடலாம். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா பணப்பிரச்சனை..... வேலையிலபிரச்சனை  வீட்டுல சண்டை இப்படி...
 “அப்படி ஏதும் இல்லீங்க, அம்மா தான் அடிக்கடி திட்டுவாங்க  அட கிறுக்குப்பையா அப்படினு அதனால எல்லாம் பிரச்சனை இல்லை
“அப்புறம் என்ன?
“ஆனா டாக்டர் என் பிரண்ட் ஒருத்தன் மட்டும் கிறுக்குபையன் மவனே அப்படினி திட்டறான் அப்படினா நான் கிறுக்கா இல்ல எங்க அப்பன் கிறுக்கா அப்படினு கொஞ்ச நாளா சந்தேகம் டாக்டர்
“ஓகே.கண்டுபிடிச்சிடலாம் “
“எது டாக்டர் கிறுக்கன் யாருனா?
“அட அது இல்லப்பா. உன்னோட நோயைச்சொன்னேன் “
“அப்ப சரிங்க

டாக்டர்:- “பயம் ஏதாவது ...தெனாலி பட கமல் மாதிரி எதைபாத்தாலும் பயம் வருமே அது மாதிரி....
 இதுக்கு ‘ஃபோபியா னு பேரு அப்படி ஏதாவது.....
ஃபோபியா எல்லாம் இல்லீங்க டாக்டர் சோபியா தான்

“ஐ நான் கண்டுபிடிச்சிட்டேன் உங்க வியாதியை.... (மனதுக்குள் ஓ இது காதல் கேசா தான் இருக்கணும்)
“சொல்லுங்க டாக்டர் சொல்லுங்க
“கொஞ்சம் இருங்க
நர்ஸ்:-  சார் பேஷண்ட் யாரும் இல்ல டைம் ஆகுது நான் கிளம்பறேன்
சரிம்மா நீ கிளம்பு சாரு கூட பேசிட்டு அப்புறமா நான் கிளம்பி போறேன்
“இப்ப சொல்லுங்க யாரு அந்த சோபியா?
“எங்க அத்தை பொன்னு சார்
“அப்புறம் என்ன பிரச்சனை ?
“அவங்க அப்பா தான் சார்?
“ஏன்?
“நான் கேட்டா கட்டிக்கிறேன்னு சொல்லுது டாக்டர், அவங்க அப்பா கேட்டா சொல்ல மாட்டேங்குது “
“அப்பா ன்னா பயமா? அவரு ரொம்ப முரட்டு ஆளோ?
“கொஞ்சம் முரடுதான் சார் “
“ஆமா நான் கேக்க மறந்துட்டேன். சோபியா இப்ப என்ன பண்ணுது? “
LKG முடிச்சுட்டு UKG போறா டாக்டர் “
மயக்கமாய் வந்தது டாக்டருக்கு..................
டாக்டர் “அப்பாடா நான் கண்டுபிடிச்சிட்டேன் “
“ என்ன நோய்ங்க டாக்டர் “
“ நோயை இல்ல கிறுக்கு யாருனு “
............................................................................................................................................................

 

“இந்த மாத்திரையை சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும் “

“அய்ய்ய்யோ நான் மாத்திரைனா சாப்பிடவே மாட்டேன் டாக்டர்

“அப்படிங்களா? உங்களுக்கு வாழைப்பழ ஜோக் தெரியுமா ?

“என்னங்க அது ?

“சரி இப்ப நாம நடிச்சே பாத்துடலாம் “

“நான் ஒரு ரூபா கொடுத்து ரெண்டு மாத்திரை வாங்கினு வரச்சொல்வேன்.  அதுல ஒண்ணை நீங்க தின்னுடனும் நான் எங்க இன்னொரு மாத்திரைனு கேட்டாக்கா அதான் இதுனு சொல்லணும் ஓகே வா

“ஓகே டாக்டர் “

“இந்தாங்க ரெண்டு மாத்திரை நீங்க வாங்கினு வந்ததா நினைச்சுக்குவோம் ஒண்ணை முழுங்கிடுங்க...அப்புறம் நான் கேள்வி கேக்கிறேன் செம ஜோக்கா இருக்கும்

“ஓகே சார் “.....

உன்னை எத்தினி மாத்திரை வாங்கினு வரச்சொன்னேன் ?

“ரெண்டு “

“ஒண்ணு இங்க இருக்கு இன்னொன்னு எங்க ?

“அதாங்க இது “


பாத்தீங்களா...செம ஜோக்கா இருக்கு இல்ல.... (டாக்டர் மனதிற்குள்.... எப்படி மாத்திரை  சாப்பிட வச்சுட்டோம் பாத்தீங்களா?......சத்தமாக.... சிரித்துக்கொண்டார்.
“என்ன சிரிக்கிறீங்க “
“இது பயங்கற காமெடி இல்ல.....
“ஆமா டாக்டர் “
“சரி நீங்க கிளம்பளாம்
....................................................................................................................................................
வெளியே.....
ஜோக்கு சொல்லி மாத்திரை சாப்பிட வச்சிட்டாருனு நினைப்பு அவருக்கு...சிரிக்கிறாராம் சிரிப்பு.......... நாங்கள்ளாம் எப்படிப்பட்டவங்கனு இவருக்கு எப்புடி தெரியும்...கோவை சரளா இல்ல கங்கை அமரனுக்கே அல்வா கொடுக்கிறவங்க.... மாத்திரையை பாக்கெட்டில் இருந்து தூக்கி எறிந்துவிட்டுச்சென்றான். நாம லவ் பண்ண வந்தது அந்த நர்ஸ் ஸ தான்னு எவனுக்குத்தெரியும்......!
...........................................................................................................................


4 கருத்துகள்:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல் அளிப்பிற்க்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. ஹா... ஹா... செம கில்லாடி - அல்வா கொடுப்பதில்...!

  தமிழ்மணம் இணைத்து விட்டேன்...

  +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணார் அவர்களே ! தங்களால் மட்டுமே முடியும் இந்த அயராத பங்களிப்பு.மீண்டும் நன்றியுடன்.....

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!