ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

டூவீலர் மெக்கானிசம்.


animated chair photo: Office chair (Large Animated Bodyshot) mz_6351902_bodyshot_300x400-66.gif


நமக்கும் மெக்கானிசத்துக்கும் ரொம்ப தூரங்க.ஆனா கண்டது கேட்டது வாசித்தது வச்சி ஏதாவது அப்பப்ப ட்ரைப் பண்றது உண்டு. நல்லா ரிப்பேர் செய்வேன் ஆனா சரி செய்யமாட்டேன். எப்படியோ வண்டி ஓடிகிட்டு இருக்கு.
நான் சொல்ல வர்றது இரண்டு சக்கர வாகனமான மோட்டார் சைக்கிள் பற்றியோ அல்ல மிதிவண்டி பத்தியோ இல்லீங்க.அப்புறம் எதுப்பா டூவீலர்...அப்படினு குழப்பமா இருக்கா....
(அப்புறம் என்னப்பா சொல்லித்தொலையேன் என யாரோ கேட்பது தெரிகிறது சொல்லிடறேன்ங்க.)
நம்ம உடலைப்பற்றி தான். நாமகூட டூவீலர் தானுங்க  ( நமக்கும் பொதுவா எல்லோருக்கும் இரண்டு கால்கள் தானே இருக்கு...அதான் டூவீலர்னு பெயர் வச்சிட்டேன். ஹி ஹிஹி..............

சரி விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் நீண்ட நேரம் நாற்காலியிலேயே உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பணி யில் இருக்கிறீர்களா?
கண்டிப்பாக இந்தப்பதிவு உங்களுக்கு சிறு துளியாவது உதவும்
நாற்காலியையே உங்கள் உடற்பயிற்சி நண்பன் ஆக்குங்கள்.

நாற்காலி நண்பன்
யாராவது பார்க்கிறார்கள் என்று வெட்கப்பட வேண்டாம். கொஞ்சநாள் தொடர்ந்து செய்து பாருங்கள், அப்புறம் தன்னாலேயே அவர்கள் நம்ம வழிக்கு வந்துவிடுவார்கள். இல்லையெனில் யாரும் பார்க்காத சமயத்தில் இப்படி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கொள்ளலாம்.


நாற்காலிக்கு பின்புறம் நின்றுக்கொள்ளுங்கள்.அதனை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருங்கள்.எத்தனை முறைமுடியுமோ அத்தனைமுறை. 

நாற்காலிக்கு பின்புறம் நின்றபடியே கால்களை ஒருகால் மாற்றி ஒருகால்  மாற்றி இரண்டுபுறமும் நீட்டி மடக்குங்கள்.

நாற்காலிக்கு சற்று கைதொடும் அளவு தள்ளி நில்லுங்கள். ஒருகை மாற்றிஒருகையால் தொடுங்கள்.

கழுதையாக மாறலாமே !
நாற்காலியை இருக பிடித்துக்கொண்டு பின்புறம் கழுதை உதைப்பதைப்போல் சற்று நேரம் கால்களை மாற்றி மாற்றி உதருங்கள்.

கண் அடியுங்கள்:-
  மானிட்டரையே எம்புட்டு நேரம் உற்று பார்த்துக்கொண்டிருப்பீர்கள். ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வேறுபக்கம் திரும்பி படக் படக் என்று கண்களை மூடி திறந்திடுங்கள்.
(பின்குறிப்பு:- நீங்கள் திரும்பும் திசையில் லேடீஸ் ஸ்டாப் யாரும் இல்லை என்பதினை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நம்ம கம்பனி பொறுப்பல்ல.)

கைகள்:-
கீபோர்டில் இருந்து கைகளினை முன்னே நீட்டுங்கள். அப்படி இப்படி வலம் இடமாக சுற்றி மேலே உயர்த்தி சோம்பல் முறியுங்கள்... எல்லாம் ஓடிப்போச்சு நீங்க இப்ப ஃபிரஸ் கேண்டிடேட் ஆயிட்டீங்க...உங்க வேலையை சுறுசுறுப்பா செய்ய ஆரம்பிக்கலாம்.

வாக்கிங் போவதைவிட எட்டுப்போடுங்கள்:-
வாக்கிங் என்ற பெயரில் சிலர்  மெதுவாக நடந்துச்செல்வர். ஆனால் இதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை. 

மாறாக 8 போடுங்கள்.

எப்படி?

இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கும்பொழுது டீவீலரை ஏன் 8 வடிவில் ஓட்டிக்காட்டச்சொல்கிறார்கள்?...
நன்கு கவனித்தீர்களேயானால் 8வடிவில் எல்லா திசைகளிலும் திரும்பிச்செல்லும்படியான அமைப்பு இருக்கும். வாகன ஓட்டிகள் கை இடப்பழக்கம் வலப்பழக்கம் உள்ளவர்களின் குறைபாடுகளினை எளிதில் இதன் மூலம் கண்டறியலாம். அதைப்போல உங்கள் மாடியிலோ அல்லது வெளியிலோ 8 வடிவில் சற்று உடல் அதிரும்படியான வேகமாக நடத்தல் தான் மிகப்பயன் தரக்கூடியது. ஏனெனில் உடல் எல்லா திசைகளிலும் முறுக்கப்படுகிறது.ஆகவே இந்த சிறப்பு வாய்ந்த 8 வடிவ நடை பழகுங்கள்.


அப்புறம் என்ன எல்லா நேரமும் சுறுசுறுப்பு தான் உங்கள் பணியிடங்களிலும் மற்ற எல்லா இடங்களிலும்.  



"டேய் மாப்ள நெட்டு ஏதோ லூஸ் ஆயிடுச்சினு நினைக்கிறேன் நான் டாக்டர்கிட்ட போயி அதை டையிட் பண்ணிட்டு வந்துடறேன்"

"அதுக்கு ஏண்டா டாக்டர்கிட்ட போற நம்ம செல்வம் மெக்கானிக்கிட்ட காட்டுடா"
"அட கால்ல அடிபட்டுச்சு இல்ல அதுக்கு பிளேட் வச்சிருங்காங்க மாப்ளே, அது லேசா வலிக்குது அதான் டாக்டர்கிட்ட போறோன் வந்து பேசுவோம்"

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!