ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

வாக்காளர்கள் பற்றிய கருத்துகணிப்பு

“வாக்களிக்கா வாக்களிக்கா

வாக்களிக்கா வாக்களித்து

வாக்களித்து வாக்களிக்கா

வாக்களித்து வாக்களித்து


என்னடா இது குழப்பம் என்று யாரும் கோபப்பட வேண்டாம்.

வாக்காளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமது முன்னோர்கள் இப்படி கூறி இருக்கிறார்கள்.

என்ன அருமையான வைரவரிகள்.மிக மிக சுருக்கமாக அழகாக கூறிவிட்டார்கள்.சொற்ப வார்த்தைகளில்.

விளக்கம்.

‘வாக்களிக்கா வாக்களிக்கா

உங்களுக்கு வாக்களிப்பேன்  என்று வாக்குறுதி எதுவும் தரமாட்டார்கள் உங்களுக்கு ஓட்டும் போடமாட்டார்கள்.தங்கள் விருப்பம்போல வாக்களித்து ரகசியம் காப்பார்கள்.

‘வாக்களிக்கா வாக்களித்து

உங்களுக்கு ஓட்டு சேகரிக்கும்பொழுது எவ்வித வாக்குறுதியும் தரமாட்டார்கள் ஆனால் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.


'வாக்களித்து வாக்களிக்கா'

உங்களுக்குதான் எங்கள் ஓட்டு என்று வாக்குறுதி அளிப்பார்கள் ஆனால் வேறு யாருக்காவது ஓட்டு போடுவார்கள்.
டேஞ்சர் பார்டி இவங்க தான். இவங்க தான் பயங்கரமானவங்க.


'வாக்களித்து வாக்களித்து'

உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று வாக்குறுதி அளிப்பார்கள் அதே போல் உங்களுக்குத்தான் ஓட்டும்போடுவார்கள்.

எப்படிப்பட்டவர்கள் ஆயினும் இந்த நான்கு வகைக்குள் வந்துவிடுகிறார்கள்.எப்படி நம்ம முன்னோர்கள் வாக்காளர்கள் பற்றிய கருத்துகணிப்பு.
 
அறிஞர் அண்ணா சொல்லி இருப்பாரோ? 

நம்பள்கி ஒருவர்:- "அவருதான்யா இப்படியெல்லாம் பேசுவாரு".

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.....

இந்த பாட்டுதான் தேர்தல் முடிவு வரும்வரை வேட்பாளர்கள், தலைவர்களுக்கு மிக மிக பொருத்தமாய் இருக்கும்.

நிச்சயமாக இந்த
நான்கு வகைக்குள் 
நாமும் ஒருவராக இருப்போம்.
நல்லசிந்தனையுடன்
நாணயமாக
நல்லவர்களுக்கு வாக்களிப்போம்.
நம் நாடு முன்னேறுவது
நமது ஒரு ஓட்டால் கூட இருக்கலாம்.
......................................................................................................................................................

 இது நம்ம ஏரியா.....
            வடிவேலும் இந்த தேர்தலும்...........................


கைப்புள்ள இப்படி பாக்கிறாரே !

“யப்பா கைப்புள்ள தேர்தல் எம்மாந்தூரத்துல வந்துக்கிட்டு இருக்குனு கொஞ்சம் பாத்து சொல்லுயா?

"ஏன்யா............ ஏன்யா........... இப்படி.   நான் கொஞ்ச நாளா நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்களையா?"
 
“அப்பாடா! இந்த தேர்தல்ல இருந்து தப்பிச்சேன்டா....கொய்யால! போன தேர்தலுக்கு அப்புறம் ரணகளமா இல்ல ஆக்கிப்புட்டானுங்க பொழப்பையே நாரயடிச்சுப்புட்டானுங்க நாரப்பயலுங்க