சனி, ஏப்ரல் 05, 2014

உடல் எடை அதிகரிக்க.......என்னப்பா இது உலகம் எங்க பார்த்தாலும் உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட டிப்ஸ் கொடுக்கிறாங்க ஆனா நம்மள மாதிரி பேஸ்மட்டம் வீக்கான ஆளுங்களுக்கு ஏதாவது சொல்லுங்கப்பா என்ற அன்பரின் வேண்டுகோளுக்கு இணங்க (ஆமா உன்னைப்போயி எவன் கேப்பான் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.)யாரோ கேட்டதா சொல்றதெல்லாம்  ஒரு பவர்ஸ்டார் பந்தா தான். அப்பதானுங்களே
மார்கெட்ல இடம்பிடிக்க முடியும் என்ன பண்றது நாம ஊதர சங்கை ஊதிவைப்போம் பின்வரும் ஐடியாக்கள் மூலம்.... முயன்றுதான் பாருங்களேன்.

 மூக்கைபிடிக்க சாப்பிடனும்;-


மூக்கை பிடித்துக்கொண்டு சாப்பிடுவது அல்ல.நாம சாப்பிடுவது வயிறு நிறைஞ்சு குடல்கள் எல்லாம் ரொம்பி சாப்பாடு மூக்குவரைக்கும் வரவேண்டும். சளி சிந்தினால் சோறு வர வேண்டும் இது தான் இந்த பொன்மொழிக்கு அர்த்தம். எதுவா இருந்தாலும் ஒரு கட்டு கட்டுங்க. அட பேதியே ஆனாலும்  மாத்திரைகள் இருக்கப்பா.கவலையை விடுங்க.
 
வேலை;-
என்ன ஆனாலும்சரி குறிப்பாக எந்த வேலையும் செய்யக்கூடாது.....அப்படினு வடிவேலு மாதிரி சபதம் எடுத்து ஜெயித்துக்காட்டனும்.அப்புறம் நாம எப்படி பாஸ் குண்டாகிறது.

சோற்றின் வகைகள்:-
உருப்படாத கோவிலா பாத்து உருண்டை சோறு வாங்கி திங்கணும்.உருண்டைச்சோற்றில் அம்புட்டு சத்து இருக்கு.
அப்புறம் தெண்டச்சோறு அப்படினு ஒரு பட்டம் இருக்கு. அதை எப்படியாவது கஷ்டப்பட்டாவது வாங்கிடனும் அப்புறம் சாப்பிடனும்.

மிக மிக முக்கியமான மருத்துவக்குறிப்பு:-
 சாப்பிடறதுக்கு முன்னாடி 3 வேளை சாப்பிடனும். சாப்பிட்டதற்கு அப்புறம் 3 வேளை சாப்பிடனும்.
(மாத்திரைகள் போடும் கவரில்  எழுதிக்கொடுப்பார்களே.... ஆகாரத்திற்குமுன் ஆகாரத்திற்குப்பின் அதேதாங்க.)

விருந்து உபசரிப்பு:-
 மதியம் எங்காவது விருந்துக்கு அழைத்தால் வீட்டில் காலையில் சாப்பிடக்கூடாது. அப்புறம் பந்தியில சரியா சாப்பிடலைனு யாராவது கோச்சிப்பாங்க.

'வயித்துக்கு வஞ்சனைபண்ணக்கூடாது'

வேற எதுக்கு இப்படி ஓடி ஓடி வேலைசெய்கிறோம் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.... எல்லாம் இந்த சான் வயித்துக்குதான்..அப்படினு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. அதனால.... என்ன? புரிஞ்சுதாங்க......

IRON சத்து:-
உடல் நல்லா வளரணும் ஸ்ட்ராங்கா இருக்கணும்னா இரும்பு சத்து ரொம்ப ரொம்ப அவசியம். அதனால நல்ல ஐஎஸ்ஐ கம்பேனி பிராண்டா கம்பிகள் வாங்கி தினமும் ஒண்ணு ரெண்டு கிலோ சாப்பிடணும்.

விரதம்;-
அப்படி ஏதாவது வீட்டில் கட்டாயப்படுத்தினால் அவசரமான வேலையா வெளியூர் போகவேண்டியது இருக்குனு சொல்லிட்டு நேரா நல்ல ஓட்டலுக்குப்போங்க. நம்பள நம்பி தானே ஓட்டல்கள் வச்சி இருக்காங்க அவங்க பிழைக்க வேண்டாமா?.
 
நடை;-
பூமி அதிர நடக்கக்கூடாது அப்படினு பெரியவங்க சொல்லி இருக்காங்க... காரணம் இல்லாமலியா சொல்லி இருப்பாங்க?...சோ  ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் பாட்டு கூட படிச்சு  இருக்காங்க.ஆகவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லமாக நடக்க வேண்டும்...அப்படி வேகமா போயி நாம என்னத்த பண்ணப்போறோம்...அங்கிட்டும் உக்காந்து கதைதான் பேசப்போறோம் அதனால குறிக்கோள் ல நாம கவனமா இருக்கனும்.

தூக்கம்:-
 எவ்வளவு நேரம் அதிகபட்சம் தூங்க முடியுமோ அவ்வளவுநேரம் தூங்க வேண்டும். ஆமாம் ஆபீஸ்ல போயியும் நிறையபேர் அதைத்தானே செய்யுறாங்கனு நாம ஜோக்ஸ் எல்லாம் படிச்சு இருக்கோம் இல்லையா.நாம அடுத்தவங்க கிண்டல்கேளிக்கு ஆளாக்க்கூடாது.....அதனால நாம நேர்மையா வீட்டிலேயே தூங்குவோம்.

இப்படி எல்லாம் செய்துதான் பாருங்களேன்.

நீங்க எங்கியோ போயிடுவீங்க.


4 கருத்துகள்:

 1. #நீங்க எங்கியோ போயிடுவீங்க.#
  ccu வில் இருப்பீங்க என்பதை இப்படி சிம்பாலிக்கா சொல்லி இருக்கீங்கன்னு நினைக்கிறேன் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் தம வாக்கிற்கும் நன்றி ஐயா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!