வியாழன், ஏப்ரல் 03, 2014

நாட்டுநடப்பு


“ஏப்ரல்1ந்தேதி அதுவுமா அவர ஏமாத்தவே முடியல”
"உங்க தலையில மண் இருக்குனு சொல்லி ஏமாத்துனா, அதான் எனக்குத்தெரியுமே சின்ன வயசுலே இருந்து இதைதானே எல்லாரும் சொல்றாங்கனு கூலா சொல்லிட்டுப்போயிட்டார்.
சரி விடப்பா ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு எல்லாரையும் பாத்துட்டு ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போலாம்னு வந்தா நீவேற கடுப்புல இருக்க..... எப்படி இருக்க.... நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க.

நண்பன் 1 :- “ நாம படிக்கும்பொழுது சரியான முட்டாள்னு வாத்தியார் திட்டுவாரே இப்ப அவன் என்ன பண்றான்?”

நண்பன் 2 :-முட்டாள்கள் முன்னேற்ற கழகம் னு ஆரம்பிச்சு அதன் தலைவரா இந்த தேர்தல்ல நிக்கிறார்.”
“அடப்பாவி அந்த அளவுக்கு அவனுக்கு புத்தி வந்திடுச்சா....இம் இருக்கட்டும் அப்புறம் அவன் எப்படி இருக்கான்.”
 “அவனும் கடுப்புல தான்பா இருக்கான்”
“ஏன்”
“அவன் கட்சி பொருளாளர் அவனை பயங்கரமா ஏமாத்துறானாம்”

“எப்படி ?”

“கட்சி பணத்தையெல்லாம் அவனே சுருட்டிகிட்டு எனக்கு கணக்கு வழக்கு சரியா வராதுங்க ஏன்னா முட்டாள் கழக பொருளாளர் பதவி நான் முட்டாளா இருக்கிறதாலே தானே கொடுத்தீங்க னு திருப்பி கேள்வி கேக்கிறானாம்”
“அட இது புதுமாதிரியா இல்ல இருக்கு”

“அதவிட ஒரு கொடுமை நடந்திருக்கு”

“என்ன?”

“அந்த பதவியை இவன் தான் அவனுக்கே தந்திருக்கான்”

“எப்படி?”

"கட்சி ஆரம்பிச்ச புதுசுல இவன் மட்டும் கட்சியை பதிவு பண்ண போயி இருக்கான். அப்ப கட்சினா ஒரு தலைவர் செயலாளர் பொருளாளர் எல்லாம் இருக்க வேணாமா? முட்டாள்கள் முன்னேற்ற கழகம் னா எல்லாரும் முட்டாளாவேவா இருப்பீங்க... அப்படினு அங்க கேட்டாங்களாம்: அதனால இவன கூட்டினுபோயி அந்த பதவியை வாங்கி கொடுத்தானாம்.... கடைசியில அவனாலேயே இவனுக்குத்தொல்லை வந்துகிட்டு இருக்கு”


இதுமாதிரி அவனுக்கு பல தலைவலி
"அப்புறம் ஒருதடவை மீட்டிங் ல  கழக உடன்பிறப்புக்களே!  அப்படினு பேசினானாம். அங்க ஒருத்தன் அப்படினா நாங்க உன் பங்காளிங்க தானே கட்சி சொத்தில் எங்களுக்கும் பங்குக்கொடு னு அப்படினு கேட்டானாம் இவன் நொந்து நூலாயிட்டானாம்.
யப்பா கட்சினா இவ்ளோ தொல்லை இருக்கா....
“ஆமா இப்ப கூட நான் அவனை பாக்க 11 மணிக்கா போகணும்”

“எதுக்கு”

“நானும் ஒரு சங்கம் ஆரம்பிக்கப்போறேன்”

“என்ன சங்கம்?”

“சு.சோ.ச.”
“அதென்ன சுசோச.?”
சுத்த சோம்பேறிகள் ங்கம்”
“ இப்படி யாரு ஆரம்பிக்க சொன்னது “
“நம்ம பிரணடு தான்”
“இப்ப எதுக்கு திடீர்னு”
“அவன் கட்சி கூட யாரும் கூட்டணி வைக்கலியாம் அதனால டக்குனு ஒரு சங்கம் ஆரம்பிச்சு அவன் கூட கூட்டணி வைச்சி எப்படியாவது எம்பி ஆகிட வேண்டியது தான்..அதுவும் இல்லாம நம்ம நாட்டுல சோம்பேறிகள் அதிகம். எப்படியும் கண்டிப்பா நமக்கு அதிக ஓட்டுக்கள் விழும். அப்புறம் ஒரு விஷயம் அடுத்தமுறை நீ நம்ம ஊருக்கு வரும்போது பிளைட்டுல சென்னை வந்து இறங்காதே... டெல்லியிலே இறங்கிடு”

“ஏன்டா?”

“ அடுத்த லீவ் நீ வர்ரதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் எப்படியும் எம்பி யா இருப்போம் அதனால அங்க இறங்கினா அப்படியே அந்த ஊரை நீ சுத்தி பாத்திட்டு அப்புறமா இங்க வரலாம்”

“எப்படிடா இவ்வளவு நம்பிக்கையா இருக்கே?”

அட  முன்னாடி பாண்டிச்சேரியில நடக்கலியா.... சமீபத்துல ஆம்ஆத்மி கூட கட்சி ஆரம்பிச்சு உடனே ஜெயிக்கலியா?  

             நம்பிக்கை தான் வாழ்க்கை பிரதர்.

வேணும்னா நம்ம சங்கத்துல சேந்துக்கோ.
"யப்பா ஆளைவிடு சாமி...ஆமா
நம்ம முட்டாளைப்பத்தி இவ்ளோ அருமையான செய்திகள் இருக்கு இத ஏப்ரல் ஒண்ணாந்தேதியே பதிவா போட்டிருக்கலாம் நீ. 

“அட எல்லாம் ஒரு  சோம்பேறித்தனம் தான்பா”
"அட நீ தான்பா சு.சோ.ச. வுக்கு சரியான  தலைவர்."
“ஹி ஹி ஹி நான் வரட்டா?”
“என்னப்பா வரட்டானு போற”
இந்த விளையாட்டுக்கு நான் வரல.
              "டாடா...பைபை"


4 கருத்துகள்:

  1. வரும் தேர்தலில் இப்படிப்பட்டவர்களுக்குத்தான் என் வோட்டே!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம யாருக்குப்போட்டாலும் அவிங்க இப்படி தான் இருப்பாங்க. நன்றி ஐயா.வருகைக்கும் இணைப்பிற்கும்.

      நீக்கு
  2. ஏற்கனவே சங்கம் வேறு பல பெயர்களில் இருக்கிறதே... (!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளுக்கொரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியது தான் அண்ணார் அவர்களே.!.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!