வெள்ளி, ஏப்ரல் 04, 2014

காகித மனசு.

baby animated photo:  fillechat38bp.gif

எழுதப்படாத
வெள்ளைக்காகிதம்
குழந்தைகள் மனசு.

எழுதுவதை 
ஏற்றுக்கொள்ளும் 
காகிதம் போல.


நாம் 
எழுதியதைப்பொருத்தே அமையும்
எதிர்காலம்-
குழந்தைக்கும்;சமூகத்திற்கும்.


தீயதை எழுதினால்
திருந்தாதவர்களாயும்.....
நல்லதை எழுதினால்
நாயகர்களாகவும்......

அறுபத்திநான்கு 
ஆயக்கலைகள்
இல்லையென்றாலும்
ஈரிலக்க எண்ணிலாவது
நல்லதை சொல்லிக்கொடுங்கள்.

திறம்பட வளர்த்தால்
உரமிட்டப்பயிரைப்போல
வளம் பல காணலாம்
வருங்காலத்தில்.

ஊட்டுங்கள்;
மனித நேயமும்
மற்ற உயிர்களிடத்தில் அன்பும்.
இவை
பாசத்தால் பரிணாம வளர்ச்சி கண்டு
இன்னொரு புது உலகம் பிறக்கச்செய்யும்.
 

அச்சாணி எழுத்துக்களாய்
அழுத்தம் திருத்தமாய்
அழகாய் எழுதுங்கள்-குழந்தைகள் மனதில்
நல்லதைமட்டும்.

3 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரர்
    அழகான விடயத்தை நயமோடு உரைத்த உங்களூக்கு பாராட்டுகள். சமூகம் நன்முரையில் நடை போட அனைவருக்கும் அழுத்தமான கருத்தை வழங்கியுள்ளீர்கள். நன்றிகள் சகோதரரே..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!