வெள்ளி, ஏப்ரல் 11, 2014

கவுண்டமணியும் அரசியலும்







“அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் “

கவுண்டமணி :- “வீட்டுல மேயுற கோழியை புடிக்க துப்பில்ல நாயி, இதுபோயி நிலாவை புடிக்குதாம். கேக்கிறவன் கேனையனா இருந்தா காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்குதுனு சொல்லுவானுங்களே “


.....................................................................................................................................
“ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது “

கவுண்டமணி :- “பின்ன கண்ணுல தெரியாம காதுலயா தெரியும்.போயி முதல்ல மண்ணெண்ண விளக்க ஏத்து...... இந்த கன்றாவி கரண்ட் எப்ப வருமோ?
........................................................................................................................................

 
“சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

கவுண்டமணி :- ஆமா சொல்றேனு சொல்றேனு  சொல்லிப்புட்டு செய்வீர்களா? செய்வீர்களா? னு கேக்குறியே இது உனக்கே நியாயமா இருக்கா தாயி...?.... நீ எதுவும் சொல்ல வேணாம் தாயே நீ என்ன சொல்லப்போறேனு எனக்கும் தெரியும் இந்த ஊருக்கும் தெரியும்... ‘நாப்பது நமதே இதானே..சொல்லப்போற. ஆமா அலிபாபா யாரு?
......................................................................................................................................

“நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

 நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

கவுண்டமணி:- “அட நாரவாயா, கட்சி மீட்டிங்கிற்கு வந்தா தலைவர் பேசறதை கவனிப்பியா...இல்ல கூட்டத்துல இருக்கிற பொண்ண கவனிப்பியா...பேச்ச கவனிடா...தேங்காத்தலையா “
..............................................................................................................................................

“கையளவு நெஞ்சத்தில

கடலளவு ஆசை மச்சான்

கவுண்டமணி:- “என்னமா பண்றது..... காங்கிரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும்  பிரதமர் ஆகனும்னு ஆசைனு எவ்ளோ அழகா சொல்லிபுட்ட...... புல்லரிக்குது போ “
................................................................................................................................................
“வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

கவுண்டமணி:- “ஆமாங்கண்ணா ரொம்ப வாஸ்தவம் தானுங்க. இப்ப தோத்துட்டோம்னு கவலைப்படாதீங்க...அடுத்த தேர்தல்ல பாத்துக்கலாமுங்க."
..................................................................................................................................................

“அண்ணே விஜயகாந்திற்க்கும் கெஜ்ரிவாலுக்கும் என்னண்ணே வித்தியாசம்?

கவுண்டமணி :- “இவரு போற இடமெல்லாம் அடிப்பாருடா.....என்னை மாதிரி.. அவரு போற இடமெல்லாம் அடிவாங்குவாரு.... உன்ன மாதிரி....
.............................................................................................................................................

11 கருத்துகள்:

  1. அசத்தல் போங்க... சிலது நடந்தாலும் நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதல் மிக்க மகிழ்ச்சியை தருகிறது ஐயா நன்றிகள் பல.

      நீக்கு
  2. கவுண்ட மணியா ,கவுண்டர் மணியா ...நல்லா கவுண்டர் டயலாக் பேசுறாரே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. அருமை ,அருமை
    அதிலும் கடைசி ,இன்றைய தருணத்துக்குத் தகுந்தது.
    பாராட்டுக்கள்.
    கவுண்டர் என்றும் உச்சமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. வருகைக்கு நன்றிகள் பல.

      நீக்கு
  4. வடிவேலுவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி சகோ.வடிவேலுவையும் போட்டுடுவோம்.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!