திங்கள், ஏப்ரல் 14, 2014

முட்டாள்களாய் இருப்பதில் தவறில்லை....

முட்டாள்களாய்
இருப்பதில் தவறில்லை
நட்பை
பொருத்தவரை.முட்டாள்களாய்
இருப்பதில் தவறில்லை
குழந்தைகளை
பொறுத்தவரை.


முட்டாள்களாய்
இருப்பதில் தவறில்லை
பெரியோர்களை
பொறுத்தவரை.


முட்டாள்களாய்
இருப்பதில் தவறில்லை
தானம்
பொருத்தவரை.

ஆனால்

முட்டாள்களாய் இருக்கிறோம்  
அரசியல் பொறுத்தவரை.

ஏனோ ?
தமிழ்புத்தாண்டு மாற்றி 
அமைக்கப்பட்டபொழுது 
யாரும் 
கேட்கவில்லை 
முடியவில்லை
திருத்தப்படட பொழுதும் 
இதே நிலை.


சித்திரைப்பெண்ணே !

சிங்காரித்துகொண்டு
சிரிப்பை அணிந்துக்கொள்
சக்காளத்தி தை 
நான் தான் முதல் நாளென்று...
அடுத்த ஆட்சியில்
சண்டைக்கு வந்தாலும் வரலாம்

அடுத்த ஆட்சி வந்தபின்னே தெரியும்
நீயா? 'தை'யா?
அதுவரை 
நீ வாழ்க !

கொஞ்சம் வேதனை
கொஞ்சம் குழப்பம்.

என்னடா இவன் என்று
கலங்கிவிடாதே !

அதற்கு அடுத்த ஆட்சியில் 
நீ மீண்டும் முதல்வராகிப்போவாய்.

பிறந்த நாள் காணும்
 சித்திரை பெண்ணுக்கும்
தமிழ் தாய் மண்ணிற்க்கும்
  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...
6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன்.

   நீக்கு
 2. வித்தியாசமான அருமையான
  சிந்தனையில் பிறந்த சிறப்புக் கவிதை
  மிக மிக அருமை
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் ஐயா. தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!