திங்கள், மார்ச் 10, 2014

உள்ளத்தில் நல்ல உள்ளம்





அதிகாரம் 11. செய்ந்நன்றி அறிதல்.
குறள்எண்:-101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .

IN ENGLISH,

( Neither earth nor heaven can truly repay



Spontaneous aid ) .



குறலின்  பொருள் :-நாம் பிறருக்கு உதவிகள் செய்யாமல் இருந்தும் அவர்கள் 

நமக்குச்செய்யும் உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் 

ஈடாகாது.


சிறந்த உதாரணம், திரு திண்டுக்கல்தனபாலன் அவர்கள்.ஆம் ஒரே ஒரு மின்அஞ்சல் போதும் உதவிக்கு காத்திருக்கிறார். இதுபோன்ற மனோபாவம் எல்லோருக்கும் சாத்தியமா என்றால் சற்று சந்தேகமே. மண்ணுலகும் விண்ணுலகும் இவருக்கு சாதாரணம்.
ஏனென்றால்

அதிகாரம் 67. வினைதிட்பம்.
குறள்எண்:- 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

IN ENGLISH,

(It is easy for anyone to talk,



But hard to act thereon) .



குறளின் பொருள் :- ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் அல்லது அவ்வாறு 

செய்யலாம் என சொல்லுவது மிக எளிது; ஆனால் சொல்லியபடி செய்து முடிப்பது

 அரிய செயலாகும்.

 

 


உங்களுக்கு எந்தவித தயக்கமும் இன்றி இவரிடம் கேட்கலாம் பிளாக் தொடர்பான 

விவரங்கள் அறிய. எனது பிளாக் அடிக்கடி தொந்தரவுச்செய்தது ஏனோ தானோ

 என இயங்கிக்கொண்டிருந்தது. செய்கிறேன் என்று சொல்லாமலே செய்து 

கொடுப்பது இதைவிட பெரியது.

 

 


“சொல்வதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்

 

 என்பது இவரது தாரக மந்திரமோ?


 


அவரிடம் கேட்ட ஒரே காரணத்திற்காக எனது தள வடிவமைப்பை 

மாற்றிக்கொடுத்தார். செய்ய வேண்டிய அவசியம் அவருக்கில்லை. 

 

 


“தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என உதவி செய்யும் நல்ல மனம் 

கொண்ட அண்ணாருக்கு மேற்கண்ட குறள் வரிகள் மிக மிக பொருந்தும்.


மண்ணுலகும் விண்ணுலகும் ஈடாகாது.

 

 


'நன்றி மறப்பது நன்றன்று'... வேறென்ன சொல்ல.....

 


 வாசியுங்கள் சுவாசியுங்கள்....http://dindiguldhanabalan.blogspot.com/

6 கருத்துகள்:

  1. ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்ய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்ய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. து உங்களின் பெரும்தன்மையை காடுகிறது அண்ணார் அவர்களே !.

      நீக்கு
  3. எனக்கும் உதவி செய்துள்ளார் சகோ DD அவர்கள் .குறள் விளக்கம் சொல்வதன்றி ,அதற்கு உதாரணமாய் வாழும் DDஅவர்கள் வாழ்க பல்லாண்டு !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் !
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .புத்தாண்டில்
    நான் அறிந்துகொண்ட முதற் தளம் இன்று தான் தங்களின் தளத்தை
    நான் அறிந்து கொண்டேன் அதுவும் ஒரு நல்ல மனிதரைப் போற்றி
    எழுதப்பட்ட ஆக்கத்திநூடாக் இவ் அறிமுகமும் கிட்டியுள்ளது வாழ்த்துக்கள்
    என்றும் தமிழோடு இணைந்திருப்போம் .

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!