திங்கள், மார்ச் 10, 2014

நீயா? நானா?

kingrajasc.blogspot.com

 

 "டாக்டர் ஏன் அந்த பேஷன்ட்டுகிட்ட கடுப்பா பேசறார்"

"பின்ன, எலி மருந்த பூனைக்கு வச்சா என்னாகும் அப்படினு நக்கலா கேட்டாராம்" 
................................................................................................................................                 

டாக்டர் :   என்னது நான் ஆப்ரேஷன் செஞ்சும் பிழைச்சுகிட்டானா?

நர்ஸ் :   “அப்படி கனவு கண்டேன் டாக்டர்

டாக்டர்:   “அதானே பார்த்தேன் 
............................................................................................................................


நோயாளி : டாக்டர் நாளைக்கி ஆப்ரேஷன் அப்படினி சொன்னீங்க நீங்கதான் எனக்கு கடவுள் மாதிரி
 
டாக்டர் : பத்தியா நாளைக்கு ஆப்ரேஷன்னு சொன்னவுடனே உனக்கு கடவுள் ஞாபகம் வந்திடுச்சு, கவலைப்படாதே. நான் வெறும் மாதிரி தான். நாளைக்கு நீ கடவுளை நேரிலேயே பாக்கலாம்  
.......................................................................................................................


அட கொலகாரப்பாவி

யாருப்பா அது டாக்டரை கூப்பிடறது

இல்லீங்க. ஆக்சிடெண்ட் பண்ணானே அவனை திட்டினேன்

அப்பாடா அதானே பார்த்தேன் டாக்டரை நேர்ல இப்படி கூப்பிட யாருக்கு தைரியம் வரும்
..........................................................................................................

 
நர்ஸ்: டாக்டர் அந்த 7ம் நம்பர் ஆப்ரேஷன்பேஷண்ட் சொல்லாகொள்ளாம வீட்டுக்கு போயிட்டார்

டாக்டர் : அவருக்கு ஆயிசு கெட்டினு நெனைக்கிறேன்
.............................................................................................................


வாங்க வக்கீல்கிட்டயும் டாக்டர்கிட்டயும் பொய்சொல்லக்கூடாது. எதையும் மறைக்காம உண்மைய சொல்லுங்க.  உங்களுக்கு என்ன பண்ணுது?


இதே மாதிரிதான் டாக்டர் வக்கீலும் கேட்டார் உண்மையை சொன்னேன்...இப்ப என் சொத்தையெல்லாம் அவரே பிடுங்கிட்டார்.....இருக்கிறது இந்த உயிர் மட்டும் தான்...

கவலைப்படாதீங்க அதை நான் பிடிங்கிடுறேன்..... சீச்சி நான் பாத்துக்கிறேன்
..................................................................................................................உங்களுக்கு ஆப்ரேஷன் தேவையில்லை அது இரண்டாம்பட்சம் தான் மருந்துமாத்திரையிலேயே சரியாயிடும்

பரவாயில்லீங்க டாக்டர் நான் ஆப்ரேஷனே பண்ணிக்கிறேன்

 ம் விதி யாரை விட்டது

............................................................................................

"அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சாங்களாம்" 

"பிளட்பேங்குக்குப்போயி நானே பிளட் வாங்கிட்டு வர்ரேன்னு போயிட்டு ஸ்டேட் பேங்கல போயி வரிசையில நின்னிட்டு இருந்தாராம்"
.................................................................................................................... 

"இது மெடிக்கல் மிர்ராக்கல் அப்படினு டாக்டர் சொல்லிட்டுப்போறாரே அவ்ளோ கஷ்டமானா ஆப்ரேஷன் செய்து முடிச்சிட்டு வர்ராரா?" 

"அட நீ வேற அவரு ஆப்ரேஷன் செய்த பேஷண்ட் பிழைச்சிக்கிட்டானாம் அதை தான் அப்படி சொல்லிட்டு போறார்" 
.......................................................................................................

"நீயா? நானா?வில் பேசும்பொழுது நம்ம டாக்டருக்கும் கொலைகாரன் கபாலிக்கும் பயங்கர மோதல் வந்திடுச்சாமே"

"ஏதோ கொலை சம்பந்தமா பேச்சு வந்திருக்கு அப்ப நீமட்டும் என்ன ஆப்ரேஷன் என்ற பேர்ல எத்தனைபேரை கொலைபன்ணி இருக்க அப்படினு கபாலி டாக்டரை கேட்டுட்டானாம் அதான் சண்டை"  
 
8 கருத்துகள்:

 1. ஹா... ஹா... விதி யாரை விட்டது உட்பட அனைத்தும் கலகல...

  உங்கள் தளம் .com என்று மாறுவதற்கு நேரம் ஆகிறது... அதே போல் தமிழ்மணம் சமர்பித்தாலும் உடனே இணையவில்லை...

  contact : dindiguldhanabalan@yahoo.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி அண்ணார் அவர்களே.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரர்,
  தங்களின் வலைத்தள வடிவமைப்பு அழகாக உள்ளது. தங்களது இந்த பதிவு எள்ளல் தன்மையோடு வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்து மிகவும் ரசிக்க வைக்கிறது. நன்றி சகோதரர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. தங்களின் வருகை எமக்கு பெருமை ஐயா..... நன்றிகள் பல....

   நீக்கு
  3. இந்த வலைதள வடிவமைப்பு நமது அண்ணார்
   திரு திண்டுக்கல்தனபாலன் அவர்கள் வடிவமைத்தது.

   நீக்கு
 3. இந்த வலைதள வடிவமைப்பு திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது............. என்பதை மிக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!