செவ்வாய், மார்ச் 11, 2014

வாங்க பழகலாம்



AN   IAS  கேள்வி:-  மனபிராந்தி என்றால் என்ன?
http://kingrajasc.blogspot.com



ஒரு சிறந்த குடிமகன் இருந்தார்; திடீர்னு அவருக்கு ஒரு சந்தேகம்.

ஆமா எந்த சரக்குல போதை அதிகம்

 தான் சரியாக கண்டுபிடித்து கூறுவதாக அங்கிருந்த மேதை  போதை ஆசாமிகளிடம் சவால்  விட்டுச்சென்றார்.

உடனே ஆராட்சியில் இறங்கி விட்டார். நேராக கடைக்குப்போனார். எல்லா சரக்குலயும் குவாட்டர் வாங்கினார். வீட்டிற்கு வந்து வேலையை ஆரம்பித்துவிட்டார்.

முதலில் விஸ்க்கி எடுத்தார்.... வாட்டர் கலந்து குடித்தார்...அட நல்லாதான் இருக்கு போதை.

அடுத்து 

பிராந்தியுடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டார்.  அட இதுவும் நல்லா தான்யா இருக்கு.... 

அடுத்து 

ரம் ....அட இதுவும் செம போதை தருது.....


இப்படியாக ஒவ்வொரு அயிட்டமாக தண்ணீர் கலந்து குடித்துப்பார்த்தார் .....அட எல்லாத்துக்கும் காரணம் புரிந்துவிட்டது என பிரம்மிப்புடன் முடிவை வெளியிட்டார்.


என் அருமை குடிமக்களே !
உண்மையில் போதை தருவது எது தெரியுமா?
 விஸ்கியுடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டேன் போதை இருந்தது...
பிராந்தியுடன் தண்ணீர கலந்து சாப்பிட்டேன் போதை இருந்தது...
ரம் உடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டேன் போதை இருந்தது...

இப்படி எல்லா மது வகைகளுடனும் தண்ணீர கலந்து சாப்பிட்டேன் போதை இருந்தது....

ஆகவே எனது ஆராட்சியின் முடிவு....இது தான்...
  போதை தருவது தண்ணீர் தான். நாமதான் வீணாக காசு கொடுத்து சரக்கு வாங்கி குடிக்கிறோம்......என்றார்...குடிமகன்.
என்னா ஒரு அறிவுப்பூர்வமான ஆராட்சி.


உண்மை தானோ .........?

அட அதானால தான் என்னமோ குடிச்சிட்டு இருக்கிறவங்களைப் பார்த்து தண்ணி போட்டுனு இருக்கிறார் என்கிறோமோ ?

காணும்பொங்கல் அன்று டாஸ்மாக் பயங்கர பிசி ......எத்தனையோ கோடி கணக்குச்சொன்னார்கள்.....

அதுல அந்த அதிகாரி சொன்னதுதான் ஹைலைட்டான விஷயம்..

“நாங்க ‘இத்தனை கோடி விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருந்தோம், ஆனால் இலக்கைவிட குறைவாகவே விற்பனை ஆனது


இன்னா ஒரு முன்னேற்றப் பாதைக்கான இலக்கு.......


தமிழகத்தின் முக்கிய வருமானம் தரும் துறை டாஸ்மாக் இதை அடிப்படையாக வைத்து தான் இந்த பதிவே எழுதப்பட்டது படிக்காதவங்க  இதை கிளிக் பண்ணி அவசியம் படிங்க சார்.


அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் முதலமைச்சர்கள் ஏன் அடுத்த இந்திய பிரதமர்கள் கூட இதை பின்பற்றினால் தமிழகம் மட்டும்அல்ல இந்தியாவிற்கும் அதிக வருமானம் கிடைக்கும். சிறந்த குடிமகன்கள் கிடைப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


வருங்கால முதலமைச்சர் அல்லது பிரதமர் அவர்களுக்கு  சில ‘இலவச அட  ‘விலையில்லா டிப்ஸ்கள் இதோ....


இந்த பதிவிலேயும் இருக்கு நாங்க ஆட்சிக்கு வந்தால்...
கொஞ்சம் பார்த்துக்கோங்க.


  1. புதுச்சேரியை தத்து மாநிலமாக எடுத்துக்கொள்ளலாம்.
அப்படி எடுத்துக்கொண்டால்
புதுச்சேரி டு தமிழகம் இலவச பயணம் அறிவிக்கலாம்.ஆண்களுக்கு மட்டும்.

2.குடிமகன்களின் உயிருக்கு உத்திரவாதம் தரும் அரிய திட்டம்:-
அவர்களை வீடுவரை சென்று இறக்கிவிட்டுவர பேருந்து, ஆட்டோ, வேன் வசதி செய்துகொடுக்கலாம். 

3. தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இந்தியாவா இருந்தா அனைத்து வெளிநாடுகளிலும்   டாஸ்மாக் கிளைகள் திறக்கலாம்.

4.ஒவ்வொரு பாட்டிலிலும் ஸ்கிராட்ச் லேபில்ஸ் ஒட்டி பரிசுகள் வழங்கலாம். வீட்டிற்குத்தேவையான பொருட்களை வழங்கினால் மனைவிமார்கள்  அப்புறம் ஏன் குடிக்கப்போனால் திட்டுகிறார்கள்..........


இன்னும் திட்டங்கள் நிறைய  இருக்கு....... எல்லாத்தையும் சொன்னா  நாம முதலமைச்சரா ஆனா எந்த திட்டத்தை அமல்படுத்துவது......... அதனால கொஞ்சம் ஸ்டாக் வச்சிக்குவோம்.

ஒருவேளை வருமானம் குறைந்ததால் என்னவோ தமிழகத்தில் இந்த முறை DA  வழங்கப்படவில்லை.  இப்ப தான்பா காரணம் புரியுது.

வேண்டுகோள்:-
அன்பான குடிமக்களே உங்களால் தமிழ அரசு ஊழியர்கள் பாதிப்படைந்து உள்ளார்கள் . தயவுச்செய்து அவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்...உங்கள் வாழ்க்கையில் மட்டும் விளையாடுங்கள்.

மேற்படி .....தண்ணி அடித்து சிறந்த குடிமகன்களாக திகழ நல்வாழ்த்துக்கள்.

அட தப்பா நினைக்காதீங்க........... அந்த ஆராட்சியாளர் முடிவுபண்ணி சொன்ன தண்ணியை சொன்னேன்.

 உங்க இளமையின் இரகசியம் என்ன?  

படத்தை டவுண்லோடு பண்ணி தலைகீழா பாருங்க அப்ப புரியும்.
http://kingrajasc.blogspot.com 

ஆமா மேலே கேட்ட கேள்விக்கு என்ன பதில் ?

4 கருத்துகள்:

  1. "முன்னேற்றப் பாதை" அப்படித்தான் இருக்கு...!

    'விலையில்லா’ டிப்ஸ்கள் நடந்தாலும் நடக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது...... விரைவில் பார்க்க வேண்டி இருக்கும். வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  2. 'முன்னேற்றப் பாதையில் மனதை வைத்து 'நீங்க சொல்லி இருக்கும் டிப்ஸ்கள் நடைமுறையில் வரும் 'ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளிமயமான எதிர்காலம்..... நல்லா தான் காலை வார்ரீங்க.... நன்றி ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!