கண்ணால்
‘ஊசியில் மருந்து’
ஏற்றுவதுபோல்
என்னுள் காதலை
மெல்ல மெல்ல ஏற்றினாய்.
இப்பொழுது......
காதல்
நோயால் நான்
வாடுகிறேன்.
மளிகை கடைக்காரர் :-
ஒரு பார்வை
பார்த்தாய்
‘சுக்கு’ நூறாகிப்போனது
என் மனம்.
கம்பியூட்டர்
என்ஜினியர் :-
வைரஸ் ஏறிய
ஆப்ரேட்டிங் சிஸ்டம்
போல்
அடிக்கடி தடம் மாறிப்போகிறது
என் மனம்.
சலவைதொழிலாளி:-
வெள்ளை துணியில்
நீலம் மாறியது போல்
என் மனதை
மாற்றிக்கொண்டாய்
உனதாக.
நில விற்பனையாளர் :-
பிளாட் போடுவது போல்
பகுதி பகுதியாய்
பிரித்து
பாகமிட்டாய் என்
மனதை.
மீனவர்:-
வலையில்
மாட்டிய மீனாய்
துடிக்கிறேன்...
காதலில்
விழுந்துவிட்ட நான்.
கோவில் அர்ச்சகர்:-
காதல் தேவதையே!
உன் கருணை வேண்டி
தினமும்
கவிதைகளால்
அர்ச்சனை செய்கிறேன்.
காதல் வரம் தாராயோ?..
கால்பந்து வீரர் :-
ஓங்கி உதைத்த
பந்துகள்
எல்லாம்
கோல் போஸ்ட்டை
நோக்கியே போவது போல்
என் மனம் உன்னை
நோக்கியே
ஓடி வருவது ஏனோ ?.
அறிவியல் அறிஞர் :-
புவி ஈர்ப்பு விசை
பொருட்களை ஈர்ப்பது
போல்
நீயும் ஒரு காந்தமோ ?
எனை
ஈர்த்துக்கொண்டிருக்கிறாய்
உன் பார்வையால்.
இதுதான் காதல்
ஈர்ப்பு சக்தியோ ?.
கொத்தனார் :-
சிமெண்ட் தண்ணீர்
மணல்
கலவைப்போல
நாம் ஒன்றாகக்
கலந்து கட்டுவோமா?
காதலெனும் கோட்டை.
தோட்டக்காரன் :-
காதல் ரோஜாவே !
தண்ணீர் இல்லையென்ற
வருத்தம் வேண்டாம்.
என் கண்ணீரை
விட்டாவது காப்பாற்றுகிறேன்
காதலிப்பாயா?.
வித்தியாசமான சிந்தனை... ரசித்தேன்... மீனவர் - அனைவருக்கும் பொருந்தும்...!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்...
அருமை ..
பதிலளிநீக்கு'அரசியல் வாதி ..
நாற்பது தொகுதிகளில் யார் யாரோ ..
என் இதயத் தொகுதியில் போட்டியின்றி தேர்வு நீ மட்டும்தான் !'
த ம 2
என்பாரோ ?
அரசியல்வாதியையும் சேர்த்திருக்கலாம். அருமையாக நீங்களே எழுதிவிட்டீர்களே .
நீக்குரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.