சனி, மார்ச் 01, 2014

நீங்கள் எப்படிப்பட்டவர்?
உங்களுக்கு 1000க்கு மேற்பட்ட ஃபேஸ்புக் நண்பர்கள் உள்ளார்களா?
(வெரிகுட். கீப் இட் அப். அதற்குமேலும் நண்பர்களை பெற வாழ்த்துக்கள்.)

உங்களுக்கு காலை மற்றும் மாலை தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போக நேரமிருக்கிறாதா?
 (செல்லுங்கள். உடலுக்கு நல்லது.)

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? சூடான விவாதம் செய்கிறீர்களா ?
(அப்பாடா... இந்திய அரசியல் குறித்து எவ்வளவு அக்கரை உங்களுக்கு.... சபாஷ்...உங்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கட்டும்.)

மதியம் சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரம் தூங்க நேரம்கிடைக்கிறதா ?
(நன்றாக தூங்குங்கள்.ஜப்பான் நாட்டுல வேலையின் நடுவே கண்டிப்பாக மதியம் ஒரு மணி நேரம் தூங்க சொல்வார்களாம்.கேள்விப்பட்டேன். உண்மையா?.....அப்படியாயின் மூளைக்கு அவ்வளவு நல்லதாம்.தூங்கி எழுந்தவுடன் மூளை அவ்வளவு நன்றாக வேலை செய்யுமாம்.)

தினமும் நியூஸ் பேப்பரை ஒருவரி விடாமல் வாசிக்கிறீர்களா?
(சபாஷ். உலக செய்திகள் அத்தனையும் உங்களுக்கு அத்துபடி)

தினமும் ஒன்று, அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை தியேட்டருக்குச்சென்று சினிமா பார்க்கிறீர்களா ?
(ரொம்ப ரொம்ப நல்லது; ஏன்னா உங்கள் மன அழுத்தம் மிக மிக குறைந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.)
அந்த காலத்துல.... என்று ஆரம்பித்து சுமார் 15, 20 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோட்டு சொல்கிறீர்களா?
      (போங்க சார்!....உங்களுக்கு எவ்வளவு ஞாபக சக்தி! ஹேண்ட்ஸ் ஆப் யு)

தினமும் இண்டர்நெட்டில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் செலவிட முடிகிறதா? (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவது, பிளாக் எழுதுவது, கமெண்ட் போடுவது, லைக் போடுவது இப்படி.....)
(சந்தோஷம். நீங்கள் அடுத்தவரை புரிந்தவர். உங்களுக்கு அநேகம் நண்பர்களும் நண்பிகளும் இருப்பார்களே ?)

காலை மற்றும் மாலை நண்பர்களுடன் இரண்டு மூன்று மணி நேரம் அரட்டை அடித்துப்பேசி மகிழ்கிறீர்களா?
( இதைவிட பெரிய சந்தோஷம் வேண்டுமா வாழ்க்கையில்....தொடருங்கள்.)

செல்போனில் காரணமே இல்லையென்றாலும் அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேரம் பேசுகிறீர்களா?
(நல்லது. உங்கள் பேச்சால் எதிர்முனையில் உள்ளவரை நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வதோடு உங்களைப்பற்றி அவர்கள் நன்றாக புரிந்துக்கொள்வர்.)

பேங்க் பாஸ்புக் அக்கவுண்ட் இல்லை ஆனால் சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் அக்கவுண்ட் இருக்கா ?
(அப்படியா? சந்தேகமே இல்லை நீங்கள் ஒரு இண்டர்நெட் பிரியர்...உலகம் உங்கள் கையில்.....தான்.)
பிளாக் ஆரம்பிச்சு 500 வது பதிவு (யாருமே கமெண்ட்ஸ் போடலனாலும்) போட்டாச்சா ?
(யப்பா அதி புத்திசாலி.... அயராத உழைப்பாளி.... நீங்கள். உங்களை அடிச்சிக்க யாராலயும் முடியாது.)

கையில் டேப்லட்..... காதில் ஹெட்ஃபோன்.... டூவீலர் இப்படியாக உங்கள் வாழ்க்கை ஜாலியாக போகிறதா ?
நீங்கள் கொடுத்துவைத்தவர் தான்.....அம்புட்டு ஜாலியான  வாழ்க்கை உங்களுக்கு....

இத்தனையும் செய்ய உங்களுக்கு நேரம் இருக்கிறாதா... இதையெல்லாம் உங்களைத்தவிர அட நம்மளைத்தவிர தவிர வேற யாரால முடியும்.
ஏன்னா
இதையெல்லாம் செய்ய.....வெட்டி ஆபிஸர்களுக்குத்தான் இம்புட்டு நேரம் கிடைக்கும்...
நாம  எப்புடி ?
4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சும்மா டைம் பாஸுக்கு சார். நன்றி தங்கள் வருகைக்கு.

   நீக்கு
 2. சீப் வெட்டி ஆபீசர் பட்டத்தை எனக்கு ஏற்கனவே கொடுத்து விட்டாள் என்னவள் ...நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நிலையில் தினமும் தொடர்ந்து ஐந்நூறு மேற்பட்ட பதிவுகள் போட்டு விட்டதால் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா.... இங்கமட்டும் என்னனு நினைக்கிறீங்க....
   நன்றி அய்யா,

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!