ஞாயிறு, ஜனவரி 05, 2014

பல்சுவை

காந்தியின் 

அகிம்சையும்


                                                                    இம்சை தான் -
                                                           
                                                              வெள்ளைக்காரனுக்கு.
***************************************************************

 நீ  இல்லாத  நான்

செல்போன் இல்லாத -

சிம்கார்ட் .
****************************************************************

வாஸ்து நிபுணர் :  அந்த வீட்ல அத மாத்து இத மாத்துனு வாஸ்து சொன்னது ரொம்ப தப்பாப்போச்சு.

நபர் : ஏன் என்ன ஆச்சு ?

வாஸ்து நிபுணர் : புது வருஷம் பொறந்ததும் என்னையே மாத்திட்டாங்க. புது நிபுணர் கிட்ட ஆலோசனை கேக்கிறாங்களாம்.

********************************************************************* 


நம்பிக்கை
..........................

தடம் மாறி

நீ 

நடப்பது

ஏற்ற இறக்கத்துடன்

கரடு முரடாக இருக்கலாம்.

கவலைப்படாதே !

அது 

உனக்கும்

 பிறர்க்கும் 

புதிய பாதையாக 

அமையக்கூடும் -

நடப்பதை மட்டும் 

நிறுத்தி விடாதே .
******************************************************************


 மீன் வறுவல்
..............................

மீனுக்கு 

தகனமேடை ஆகிப்போனது - 

தோசைக்கல்.
*********************************************

தோதானதை

தேவையான விகிதத்தில்

சேர்ப்பதுவோ -

சமையல்.
********************************************

வெட்டப்பட்டவன் 

வெட்டியவனையே  அழ வைக்கும் அதிசயம் -

வெங்காயம்.
***************************************************

 முரண்பாடு
............................

பெயரில் என்னவோ இனிப்பு

சாப்பிடச்சொல்வதெல்லாம் கசப்பு -

சர்க்கரை நோய்.
************************************************ 

சூரியன் முகம் பார்க்கும்

நிலைக் கண்ணாடிகளோ -

நீர்நிலைகள்.
**********************************

Animated Graphics for Myspace
Myspace Layouts & HTML Codes
Myspace Graphics
"எவ்ளோ தேனை குடிச்சாலும் தாகம் தீர மாட்டேங்குது... கொஞ்சம் தண்ணி குடிச்சுதான் பாப்பாமே !"

******************************************************** 











  

2 கருத்துகள்:

  1. #மீனுக்கு

    தகனமேடை ஆகிப்போனது -

    தோசைக்கல்.#
    அப்படின்னா ...
    மீனுக்கு மின்சார தகன மேடையானது அவன் ?
    என்றும் சொல்லலாம்தானே ?
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சொல்லலாம்...........
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!