காற்றின் திசைக்காட்டி
அதென்ன பாதரசம் ?.
பருப்புரசம் மிளகுரசம் கொத்தமல்லிரசம் இதெல்லாம் தெரியும் பாதரசம் தெரியாது
என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.
வாங்க மேட்டருக்கு போவோம்.
(ஆமாம் கிறிஸ்துமஸ் நியூ இயர் க்கு எல்லாம் ‘மேட்டருக்கு’ கூப்பிடல இப்ப மட்டும் கூப்பிடறயாக்கும் என்று யாரோ
பிரதர் புலம்புவது கேட்கிறது).
அறிவியல் பாடம்
என்றாலே சோதனைகள் கூடவே சேர்ந்து வரும். எந்த சோதனை என்பது அவரவர் படிக்கும் திறனை
வைத்து யூகித்துக்கொள்ளவும்.
முக்கியமாக ரெண்டு
சோதனைகள்
1.
படிப்பதே சோதனை
2.
அறிவியல் பாடத்தினை புரிந்துக்கொள்வதற்காக செய்யப்படும் அறிவியல் ஆய்வுச்
சோதனைகள்.
மேல் வகுப்புகளில் அறிவியல் பிரிவு மாணவர்கள் அடிக்கடி ‘லேப்’புக்குச் சென்று சோதனைகள் செய்து பிராக்டிக்கல்
வகுப்பை முடித்து ஆர்வமுள்ளவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிவாகைச் சூடுவர்.
“ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சோதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி ” அப்படினு நம்ம
மாதிரி ஆசாமிகள் பாடுப்பாடிக்கொண்டு ஜாலியா டைம்பாஸ் பண்ணு வார்கள்.
அதுவும் கெமிஸ்ட்ரி லேப் என்றால்
இன்னும் கொஞ்சம் சோதனை தான். காரணம் ஈக்குவேஷன்கள் மற்றும் குறியீடுகள்...
நீருக்கு இது காற்றுக்கு இது அப்படி இப்படினு கிறுக்கு பிடித்து விடும்....
உதா:
உதாரணம் என்பதை உதா என இப்படி சுருக்கி எழுதுவது.........காற்றில்
உள்ள மூலக்கூறுகள் ஆக்சிஜன் கார்பன்டை ஆக்சைடு ஹைட்ரஜன் ........இப்படி ஆரம்பித்து
மந்த வாயுக்கள் ஹீலியம் வரை போய் நிற்க்கும்...குறியீடுகள் வேதிப்பெயர்கள். ஆமா
எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும் ஒத்துவரலனு தான் நான் வேற குருப்பே எடுத்தேன் அப்படினு
பல பேர் சொல்ல கேள்விபட்டிருப்பீர்கள்.
ஒரு ஜோக்:
“ஏன்டா அந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் உன்ன
எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரி முறைச்சி பாக்கிறார்”
“அதுவா எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து வரல மச்சி”
(என்னங்க நீங்க
ஜோக்குனு சொல்றேன் சிரிக்காம இருந்தா எப்படிங்க கொஞ்சம் சிரிச்சுட்டு அப்புறம் மேல
படிங்க. ‘மேல’ னு சொன்னா முதல்ல இருந்து ஆரம்பிச்சிடாதீங்க.......)
இதெல்லாம் மேல் தட்டு சமாச்சாரம் .
இப்ப காற்றின் திசைக்காட்டிக்கு வருவோம்.
‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா’
‘காற்றே பூங்காற்றே.....’ பாடிக்கொண்டே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது படிச்சி
முடிச்சிடுங்க....
காற்றைப்பற்றி அனைவருக்கும் தெரியும் .காற்றின் அடர்த்தி
மூலக்கூறு அதற்கு எடை உண்டு அழுத்தம் உண்டு நிறம் இல்லை இப்படி சொல்லிக்கொண்டே
போனால் அப்புறம் இந்த பிளாக்குக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து வரல னு கிளம்பி போயிடப்போறீங்க.......
உங்கள போர் அடிக்க விரும்பல. (இப்ப மட்டும் என்ன வாழுதாம் அப்படினி யாரும்
சொல்லப்படாது.)
காற்று எந்த திசையில் இருந்து வீசுகிறது அப்படினு ஒரு சின்ன
செய்முறை மூலமா செய்து கண்டு பிடிக்கலாம். நல்லா இருக்கும்.
( இத நான் சொல்லக்கூடாது
) சிறு பிள்ளைகளுக்கான எளிய முறை
செய்ய தேவையான
பொருட்கள்;
1. கண்ணாடி பாட்டில் அல்லது டம்ப்ளர் -1
2.குண்டூசி-1
3.கோழியின் இறகு அல்லது பறவைகளின் இறகு-1
4 தீர்ந்துப்போன மை குச்சி-1.
5.மணல் அல்லது மண்
செய்முறை: டம்ப்ளரில் மணலை நிரப்பவும். அதில் மைக்குச்சியை நிறுத்தவும்.
இறகின் முனைப்பகுதியில் குண்டூசியை செருகி அதனை மைக்குச்சியின் துவாரத்திற்க்குள்
செறுகவும்.
திசைக்காட்டும் கருவி ரெடி.
இதனை எங்கேனும் வைத்துப்பாருங்கள். காற்றின் வேகத்திற்க்கு
ஏற்ப இறகு சுழலும். முனை பகுதி எந்த பக்கம் நிற்கிறதோ அதுவே காற்று வீசும் திசை.
சிறு பிள்ளைகள் அழகாக ரசிப்பார்கள்.
அட எங்க சார்
கிளம்பிட்டீங்க..... செய்யவா ?....... அப்புறம் அந்த பாதரசம் மேட்டர் கேட்டுட்டு
போயிடுங்க சொல்லனா என் தலை வெடிச்சிடும்.
கேம்ளின் பேனாவின் பின்புறம் ஒரு சில்வர் மூடி அமைப்பு இருக்கும் . அதனை
திறந்துக்கொள்ளுங்கள். லேப் ல பாதரசத்தை சிறிது யாரும் பார்க்காத போது எடுத்து
ஊற்றி மூடிக்கொள்ள வேண்டியது தான்.
அப்புறம் என்ன? வீட்டிற்கு எடுத்து வந்து தரையில் ஊற்றி விளையாட வேண்டியது தான். மீண்டும்
பேனாவில் சேகரித்துக்கொள்ளுங்கள். வேண்டும் போது விளையாடுங்கள்.
மன்னிக்கவும். என் பள்ளி.
கவிதை ஒன்று
காற்றைப்போல
காதலும்
காணத்தெரிவதில்லை.
கண்டுணரவே முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!