அடர் பனியின் குளிருக்கு
நிலவும் பயந்து மறைந்துக்கொள்ள
அயர்ந்த தூக்கம் அனைவரும்
நடுங்கும் குளிருக்கு
 போர்வைக்குள் பயந்த மனிதர்கள்
இரவு 12.57.........
அலற்றியது  செல்போன்.
அச்சத்துடன் நோக்கி
இந்த நேரத்தில் போன் வருது
யாருக்கு என்ன ஆச்சோ..?.... 
நடுங்கும் குளிரிலிருந்து
 கடவுள்களை வேண்டி .....எடுத்தால்
புது நெம்பர் 
ஹ.........லோ...நடுக்கத்துடன் நான்.
"டேய் மாப்ள குவாட்டருக்கு
 நீ காசு குடுத்துட்டு போயிட்டியா
இல்ல நான் குடுக்கணுமா ?"......
போதையில் ஒரு
புண்ணியவான் .......
அட பரதேசிகளா 
உங்க நேர்மைக்கு  ஒரு அளவும்
நேரம் காலமும் இல்லையா ?
அவனுக்கு பதில் என்ன சொல்வது........?
கட்பண்ணி விட்டேன்.
பட்  அவன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுது .
---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!