காந்தியின்
அகிம்சையும்
இம்சை தான் -
வெள்ளைக்காரனுக்கு.
***************************************************************
நீ இல்லாத நான்
செல்போன் இல்லாத -
சிம்கார்ட் .
****************************************************************
வாஸ்து நிபுணர் : அந்த வீட்ல அத மாத்து இத மாத்துனு வாஸ்து சொன்னது ரொம்ப தப்பாப்போச்சு.
நபர் : ஏன் என்ன ஆச்சு ?
வாஸ்து நிபுணர் : புது வருஷம் பொறந்ததும் என்னையே மாத்திட்டாங்க. புது நிபுணர் கிட்ட ஆலோசனை கேக்கிறாங்களாம்.
*********************************************************************
நம்பிக்கை
..........................
தடம் மாறி
நீ
நடப்பது
ஏற்ற இறக்கத்துடன்
கரடு முரடாக இருக்கலாம்.
கவலைப்படாதே !
அது
உனக்கும்
பிறர்க்கும்
புதிய பாதையாக
அமையக்கூடும் -
நடப்பதை மட்டும்
நிறுத்தி விடாதே .
******************************************************************
மீன் வறுவல்
..............................
மீனுக்கு
தகனமேடை ஆகிப்போனது -
தோசைக்கல்.
*********************************************
தோதானதை
தேவையான விகிதத்தில்
சேர்ப்பதுவோ -
சமையல்.
********************************************
வெட்டப்பட்டவன்
வெட்டியவனையே அழ வைக்கும் அதிசயம் -
வெங்காயம்.
***************************************************
முரண்பாடு
............................
பெயரில் என்னவோ இனிப்பு
சாப்பிடச்சொல்வதெல்லாம் கசப்பு -
சர்க்கரை நோய்.
************************************************
சூரியன் முகம் பார்க்கும்
நிலைக் கண்ணாடிகளோ -
நீர்நிலைகள்.
**********************************
Myspace Graphics
********************************************************
#மீனுக்கு
பதிலளிநீக்குதகனமேடை ஆகிப்போனது -
தோசைக்கல்.#
அப்படின்னா ...
மீனுக்கு மின்சார தகன மேடையானது அவன் ?
என்றும் சொல்லலாம்தானே ?
+1
அப்படியும் சொல்லலாம்...........
நீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.