புதன், டிசம்பர் 12, 2012

என் டைரியிலிருந்து...

எதையோ தேடப்போய் இது கிடைத்தது.... என் பழைய டைரி....1996..வருடத்தியது...

புரட்டிப்பார்த்ததில் பிடித்ததவை.....
           
அன்பை +  கொள்
பகையை - கொள்
நட்பை   x  கொள் 
வாழ்க்கையை ( %) வகுத்துக்கொள்.

.........................................................................
புயல் வந்ததால்
புவியில் பலத்த மழை. -உன்
மடல் வந்ததால்
மனதில் பலத்த புயல்.
...................................................................
ஒருவர் மேல் அன்பு வைத்து விட்டால் அவருக்கு பிடித்தது எல்லாம் நமக்குப் பிடிக்கிறது....அவருக்கு பிடிக்காதது நமக்கும் பிடிக்காமல் போகிறது  இது எப்படி ?
...................................................................
நினவுகளால் ஆனது தானே நெஞ்சம்
..........................................................................................
எல்லா ஜீவ ராசிகளுமே ஏதோ ஓர் அங்கீகாரத்திற்கு  ஏங்குகிறது.
...........................................................................................................................
மாலை மாத்திகிட்டா தான் கல்யாணமா ? 
மனசு மாத்தி கிட்டா போதாதா ? இதுவும் ஒருவகை கல்யாணமே !
...............................................................................
நாளை நடக்கும் என்ற 
நம்பிக்கையில் தூங்கு.
...........................................................
நாம யாரையாவது ஏமாத்தலாம்
நம்மை யாராவது ஏமாத்தலாம்- ஆனா
நம்மை நாமே ஏமாத்திக்க கூடாது.
..................................................................................
உலகத்துல எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் தான்.
.....................................................................................................
இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது
கஷ்டப்பட்டு இஷ்டப்படுவது  எது மேலானது...?
........................................................................................................
நாய் என்று கூப்பிடு
பேய் என்று கூப்பிடு
பன்றி என்று கூப்பிடு
பையா என்று கூப்பிடு.....
எப்படி கூப்பிடுகிறாய் என்பது
 எனக்கு முக்கியம் அல்ல.....
எப்படியாவது நீ என்னை கூப்பிட வேண்டும்
 அதுவே முக்கியம்.
...............................................................................................


மஞ்சள் வாங்கினாய்-கூடவே
மருதாணி வாங்கினாய்.

வளையல் வாங்கினாய் -கூடவே
வாழைப்பழம் வாங்கினாய்.

பஸ்ஸில் படிக்க புத்தகம் வாங்கினாய்- கூடவே
பூவும் வாங்கினாய்.

எல்லாம் வாங்கிய நீ

ஊருக்கு சென்ற பின் தான் தெரிந்தது...என்

தூக்கத்தையும் வாங்கிச்சென்றாய் என்பது.
......................................................................................................
சோதனையை சாதனையாக்கு.
.............................................................. ..

my life is in your hands.
....................................................

வெள்ளைக்கிள்ளை கள்ள சிந்தை-ஔவையார்.

...............................................................................................................................................
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
..............................................................................
marriage is an institution
.............................................

சந்தோஷப்பட வாழ்க்கையில நிறைய இருக்கும் போது  இல்லாதத 

நினைச்சி ஏன் குழம்பிக்கிறோம்.

........................................................................................
அ விற்கு 

இ சொல்லிடும் இனிய வந்தனம்.

ஆ காணவில்லை என

ஊ என்று முறைக்காதே..

ஈ என்று இளித்த போது

ஐ என்று நண்பன் தொட

ஏ வென சத்தம் போட்டதில்

எழுத்துக்கள் எல்லாம் 

ஓடி ஒளிய

ஓடிப்பிடித்து 

ஒட்டி ஒட்டி 

உனக்காய் ஒரு கவிதை  மடல்.
......................................................................................
எவரிடத்திலும் எதையும் எதிர் பார்க்காதே...

நன்றாக நினைத்துப்பார்.    

 அது கடைசியில்  உன்னிடம் இருந்தே தான் கிடைத்திருக்கும்.
.....................................................................................................

****இன்னும் இருக்கு என்னால முடியல*****....







3 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!