புதன், அக்டோபர் 26, 2011

சைக்ளோட்ரான்

சைக்ளோட்ரான் என்பது அறிவியல்.  நியூட்ரான், புரோட்டான்களின் ஓட்டம் குறித்து பாடம்.  பாடம் இப்படி இருக்க,   அறிவியல் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டது.சைக்ளோட்ரான் என்றால் என்ன ? விளக்கம் தருக. 5மார்க் கேள்வி.   இக்கேள்விக்கு என் நண்பர் ஒருவர் எழுதிய விடைதான் காமெடி.
பதில் : சைக்ளோட்ரான் என்பது சைக்கிள் ஓட்டுகிறான் என்பதன் சேர்த்து எழுதப்பட்ட வாக்கியம் .சைக்கிள்+ஓட்டுகிறான் என்பதன் சுருக்கம்.சைக்கிளை எப்படி ஓட்டவேண்டும் என்பதைபற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.சைக்கிளின் பல்வேறு பாகங்கள் உள்ளன................................இப்படி ஒரு பக்க அளவில் கதை விட்டு பதில் எழுதி இருந்தான்.  இதற்கும் ஆசிரியர் எப்படியோ 5 மார்க் போட்டிருந்தார்.   ( அந்த ஆசிரியர் விடைதாள் திருத்தும் அழகே தனிதான் .கையெழுத்து அழகாஇருந்தாலும் பக்க அளவில் அதிகமாக இருந்தாலும், 5 மார்க் கேள்விக்கு ஒரு ஜான் அளவுக்கு மேல்  நீளம் இருக்க வேண்டும்.இப்படி இருந்தால் முழுவதுமாக 5 மார்க் போட்டுவிடுவார்.) ரேங் கார்ட் போடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள் விடைத்தாள்களை கொடுத்து மதிப்பெண்கள் சரியாக போடப்பட்டுள்ளதா? மார்க்குகளின்  கூடுதல் சரியாக உள்ளதா?  என விடைத்தாள் கொடுத்து சரிபார்க்க சொல்லுவது வழக்கம். அதேபோல் இந்த பேப்பரும் கொடுக்கப்பட்டது. நண்பர் பக்கத்தில் இருந்த என்னிடம் விடைத்தாளினை காட்ட நானும் மதிப்பெண்களை கூட்டி சரிபார்க்க என் கண்ணில் பட்டது சைக்ளோட்ரான் விடை........ அடக்க முடியாமல் சிரிப்பு வர....நான்சிரிக்க.... ............பக்கத்தில் இருந்தவர்கள் சிரிக்க......ஆசிரியர் காரணம் கேட்க........நண்பருக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டு எங்களுக்கும் விழுந்தது உதை.

1 கருத்து:

  1. ரொம்ப முக்கியமா சைக்ளோட்ரான் தமிழ்வழி குறிப்பு தேடிக்கிட்டு இருக்கிறேன் கடுப்பேத்துறீங்களே....தமிழ்நாட்டுல தமிழ் தமிழ்னு உயிரவிடுராங்க ஆன அறிவியல் பாடங்களுக்கு தமிழ்வழி மாணவர்கள் பாடு....இருந்தாலும் அந்த நகைச்சுவை நல்லா இருந்துது நன்றி

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!