வெள்ளி, ஏப்ரல் 03, 2015

மிஸ்டுகால் கொடுங்க..புது தண்டனையா ?......

“ என்னது உன்னுடைய தற்காலிக தண்டனையை ஆயுள் தண்டனையா மாத்தப்போறாங்களா என்னடா சொல்றே...? “


“ ஆமாண்டா நான் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செஞ்சு வைக்கப்போறாங்க”
.............................................................   

அப்ப அது யாரு வீடா இருக்கும் ?.....

“ எப்படிடா திருடப்போன இடத்துல மாட்டிக்கிட்டே? “


“ நான் யாருக்கு மாமூல் கொடுத்தாலும் ஒரு நோட்டுல என் கையெழுத்து போட்டுகொடுப்பது மாமூல் எசமான். நான் திருடின வீட்டில் என் கையெழுத்து போட்ட நோட்ட பார்த்து அப்படியே ஷாக்காயி நின்னுட்டேன் பிடிச்சிட்டாங்க “
...........................................................................
உங்களுக்கும் இப்படி மெசேஜ் வந்திருக்குமே...?

“ கட்சியில சேரச்சொல்லி மிஸ்டுகால் பண்ணும் வசதியை அறிமுகம் செஞ்சது நல்ல ஐடியாதான் ஆனா இதுக்கு தலைவர் ஏன் கோபமா இருக்கார்? “


கட்சியில இதுவரை யாரும் சேரல, நீங்க தான் முதல் உறுப்பினர் ஒரு மிஸ்டுகால் கொடுங்க போதும் உங்களை உறுப்பினராக்கிவிடுகிறோம் ...அப்படினு கட்சி தலைவருக்கும் மெசேஜ் அனுப்பிட்டாங்க அதான் தலைவர் கோபமா இருக்கார் “
...................................................................

இது தாண்டா உலகம்.


சிலர்
ஊழலை ஒழிக்க
போராடுகிறார்கள்.

பலரும் 
போராடுகிறார்கள்-
இவர்களை 
ஒழிக்க.

8 கருத்துகள்:

 1. நகைச்சுவை அருமை கவிதை ஸூப்பர் நண்பரே...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  எல்லாவற்றையும் இரசித்தேன் த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவையை ரசித்து படித்தேன். மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஹஹஹஹ....அனைத்தும்

  கவிதை ....ம்ம்ம் உலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு..

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!