வெள்ளி, மார்ச் 06, 2015

மூளைக்கு வேலை ...

கதையாம் கதையாம் விடுகதையாம்

விடை சொல்லு சுப்பா மக்கா....
கொஞ்ச நேரம் மூளைக்கு வேலை கொடுங்களேன் சகாக்களே...!
.....00000.....

தாய் இனிப்பாள்

மகள் புளிப்பாள்

பேத்தி மணப்பாள்

அவங்க யாரு?
.....00000.....

கறுப்பர்கள் காலம் போனா 
வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வருவான்

அவன் யார்?
 .....00000.....

ஆற்றில் சுரக்காத நீர்

ஊற்றில் சுரக்காத நீர்

யாரும் விரும்பாத நீர்

அது என்ன?
 .....00000.....

ஓடி பிடிச்சு விளையாடுவாங்க

ஒரு காலும் இல்லாமலே

ஒளிஞ்சுக்கவும் இடமில்லே

விளையாட்டும் முடிஞ்சதில்லே

அது என்ன?
.....00000.....

எல்லாம் தெரிஞ்ச மாதிரி 
எதுவேணா சொல்லுவான் இந்த 
எழுத படிக்க தெரியாத 
வெட்டி வீரப்பையன்.... 
அவன் யார்?
.....00000.....

எங்கும் இருக்கும் புள்ள

ஊரைவிட்டு ஓடிப்புட்டா

புடிச்சு வந்து அடைச்சா தான்

பொழுதுக்கு போய் சேர முடியும் 
அவள் யார்?
.....00000.....

ஒத்துமை இல்லாம

உன்னை பிரிஞ்சேன்

ஒதுக்கு புறமா 
என்னை 
தூக்கி எறிஞ்சான்?

நான் யார்?
 .....00000.....

மூடும் திறக்கும் முத்திருக்கும் பெட்டி

பாடும் படிக்கும் பாம்பிருக்கும் சட்டி.

அது என்ன?
 .....00000.....

வட்ட சட்டி

வாயில்லா குட்டி

கட்ட பெட்டிக்குள்

வாயாடும் சுட்டி

அது என்ன?.
 .....00000.....

வேணாம்னு வெட்டினாலும்

வளர்ந்துக்கொண்டுதான் இருப்பான் 
வெட்க கெட்ட வெறும் பய..

அவன் யார்?
.....00000......  

12 கருத்துகள்:

 1. அடாடா, இப்படியெல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தீங்கன்னா, அப்புறம் நான் உங்க வலைப்பக்கமே வரமாட்டேன் தெரிஞ்சுக்குங்க.

  கடைசி ஒண்ணு தான் எனக்கு தெரியும்னு நினைக்கிறேன் - நெகம் சரியா?

  பதிலளிநீக்கு
 2. தமிழ் மணம் 2
  விடைதானே..... இதோ இப்ப வர்றேன்......

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான பதிவு. விடைகளை யோசித்து சொல்கிறேன்.

  எனது வலைப்பூ மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு வருகை தாருங்கள். இன்றைய பதிவு அசோகா அல்வா ஸ்வீட் பதிவு.

  பதிலளிநீக்கு
 4. 1 மாம்பழம்
  2 தலை முடி
  3 கண்ணீர்
  4 சதுரங்கம்
  5 நாக்கு
  8 வாய்
  9 கடிகாரம்
  10 மரம்

  என்பக்கமும் நான் அவ்வப்போது விடுகதைகள் பதிவிடுவேன் சகோ.

  உங்கள் விடுகதைக்கு - மேலே பதில்கள் சரியான பதிலா எனத் தெரியவில்லை. முயன்ற வரை பதில் தந்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்சகோ, ஒருசிலதுக்குமட்டும் தெரியுது இதுசரியா?
  2.உளுந்து
  34.காற்று
  8.வாய்
  9.நாக்கு
  10.நகம்
  6காற்றாக இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  மூளையை சலவை செய்கிறது... இப்படி கேள்வி கேட்டால் சொக்கன் அண்ணா சொன்னது போல தங்களி் பக்கம் தலை வைத்து பாா்க்க மாட்டோம்.... ஆகா...ஆகா....ஆகா...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. பதிலுரைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
  விடைகள்.
  1.பால்,தயிர், நெய்
  2.தலைமுடி
  3.கண்ணீர்
  4. மேகமும் நிலவும்.
  5.நாக்கு.
  6.சக்கரத்தின் டியூப்பில் அடைபட்ட காற்று.
  7.காலனி.
  8.வாய்.
  9. CD டிஸ்க்
  10.நகம்.

  பதிலளிநீக்கு
 10. ம்ம் பரவாயில்லை லேட்டா வந்தா மூளையைக் கசக்கத் தேவையில்லாமல் போயிற்று ஹிஹிஹி...விடை எல்லாம் தெரிஞ்சுடுச்சே....நன்றி ! ரசித்தோம்....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!