ஞாயிறு, மார்ச் 08, 2015

கனவு... மாத்திரை...

கிளினா கொத்ததானே செய்யும். அதுக்குனு அதை வளர்ப்பவனுமா?...

“பொண்ணுக்கு எப்ப கல்யாணம் ஆகும்னு அடிக்கடி கிளி ஜோசியம் பார்க்க கூட்டினு போனது ரொம்ப தப்பா போச்சுனு சொல்றீங்களே ஏன் ? “


“அவன் என் பொண்ணை கொத்தினு போயிட்டானே ”

000000000000000000000000000000000000000

எந்த தண்ணினு தெளிவா சொல்லுங்கப்பா.............

“உன் மனைவிக்கும் பக்கத்து வீட்டு அம்மாவுக்கும் தண்ணி குழாயில சண்டையாம் அவங்க வீட்டுக்காரர் கூட சண்டைக்கு வந்துட்டாராமே அப்புறம் என்ன ஆச்சு ? “

“ அந்த ஆளுக்கு கொஞ்சம் ‘தண்ணி’ ஊத்தி சமாளிச்சிட்டேன் “

00000000000000000000000000000000000000

கனவு மாத்திரை....

“ டாக்டர் என் கனவுல அடிக்கடி என் மனைவி வர்ரா “

“ அதுக்கு என்னங்க பண்ணறது, கனவை தடுக்க முடியாது? “

“தடுக்க முடியலனா பரவாயில்லீங்க. வேற நடிகைங்க யாராவது வர்ரா மாதிரி மாத்திரை எழுதிக்கொடுங்க “

டாக்டர்:- ????
0000000000000000000000000000000000000000

அப்ப உடனே நோய் நல்லா போயிடும்"ஏங்க உப்பு டப்பாவுல இருக்கிற உப்பை எடுத்து அடிக்கடி கீழே கொட்டிடுறீங்க? " 

" டாக்டர் தாம்மா சொல்லி இருக்கார்.. உங்களுக்கு பிபி இருக்கு உப்பை குறைங்கனு அதான் அடிக்கடி குறைக்கிறேன்"

மனைவி:- ?????
0000000000000000000000000000000000000000000

5 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!