செவ்வாய், மார்ச் 03, 2015

வாரிசு...

நண்பன்:- “ஏன்டா சோகமா இருக்க ?”

நண்பன்:- “எனக்கு மூளை காய்ச்சலா இருக்குமோனு டாக்டர் சந்தேகப்படறார்டா “

நண்பன்:- அதெல்லாம் கண்டிப்பா இருக்காதுடா மாப்ளே “

நண்பன்:- “எப்படிடா உறுதியா சொல்றே”“அதெல்லாம் மூளை இருக்கிறவங்களுக்கு தாண்டா வரும்..... நமக்கெல்லாம் வரவே வராது மாப்ளே...பன்றி காய்ச்சல்னு சொன்னலாவது கொஞ்சமாவது நம்பலாம்....... டோண்ட்வொர்ரி....”


நண்பன்:- !!!!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<,

“என்னடா உடம்பு சரியில்லாத உங்க அப்பா அவரோட அக்கவுண்டுக்கு உன்னை வாரிசா நியமிச்சு இருக்காராம்....உனக்கு நிறைய பணம் வரப்போகுது...............”

“அட நீ வேற அவரு வாரிசா நியமிச்சது ஃபேஸ்புக் அக்கவுண்டுக்கு”

நண்பன்:- ???
..................................................................

“ அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே “

“ மருந்து பேரை சொல்லிட்டு, என்கிட்ட......... உங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியுமானு கேட்கிறாரே "

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

"இருக்கிறதிலேயே விலை காஸ்டிலியான  சப்பாத்தி மேக்கரா பாத்துகொடுங்க"

சேல்ஸ்மேன்:- "உங்க மனைவிமேல அவ்ளோ பிரியமா சார்? "

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"என்னங்க சார் நான் ஒன்னு கேக்கிறேன் நீங்க ஏதோ கேக்கறீங்க "

" இல்ல ஆகி இருந்தா நீயும் இதை சீக்கிரம் வாங்கிடுவே...........

சேல்ஸ்மேன்  குழம்பி முழிக்கிறான்.....??? !!!!....."
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


" ஏன்டி, நான் நாய் மாதிரி கத்தினு இருக்கேன்... நீ உன் வேலையையே பாத்துனு இருந்தா என்ன அர்த்தம்? "


மனைவி:-  "ம்ம்ம்...... எனக்கு நாய் பாஷை தெரியாதுனு அர்த்தம் போதுமா? "

கணவர்:- ???
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

டாக்டர்:- " மருந்து வாங்கி சாப்பிட்ட பிறகு ஏதாவது சேன்ஜ் தெரிஞ்சுதா? "

" தெரிஞ்சுது டாக்டர்.... என்னுடைய ஆயிரம் ரூபாநோட்டு அம்பது ரூபா அம்பது காசா ஆயிடுச்சு"

டாக்டர்:- ???
...........................................................................................

"மாப்ளே ஏபிசிடி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே கம்பியூட்டர் கண்டு பிடிச்சு இருப்பாங்கனு நினைக்கிறேன்டா"

எப்படிடா சொல்றே

அதான் கீ போர்ட்ல ஏபிசிடி யை தப்பு தப்பா மாத்தி மாத்தி வச்சி இருக்காங்களே...

???
........................................................................
இன்றைய சிந்தனை:- !!!

காப்பி பேஸ்ட் கம்பியூட்டருக்கு வேணும்னா ஒத்துவரலாம்... வாழ்க்கையில பேஸ்ட் டால பிரஷ் பண்ணிட்டு அப்புறம் காப்பி சாப்பிட்டா உங்களுக்கும் உங்கல சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது.

15 கருத்துகள்:

 1. எல்லாம் சரவெட்கள் நண்பா...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. நகைச்சுவை எல்லாமே அசத்தல் சகோ. இப்போதான் உங்க தளத்திற்கு வருகிறேன்...நாய் பாஷை சிரித்து சிரித்து....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... மிக்க நன்றிகள் பல.

   நீக்கு
 3. “அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே “

  “மருந்துப் பேரை சொல்லிட்டு, என்கிட்ட......... உங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியுமானு கேட்கிறாரே"

  இப்படியான டாக்டர் மருந்துப் பேரைத் தானா எழுதிக்கொடுத்திருப்பார்.

  எனக்கோ ஐயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன எழுதினாலும் மெடிக்கல்காரர் பர்த்துக்கொள்வார் என்ற தைரியம் வந்திருக்குமோ? மிக்க நன்றியய்யா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நமக்கு புரிந்துவிட்டது... சேல்ஸ்மேனுக்கு புரிந்ததோ என்னவோ?.... மிக்க நன்றி.

   நீக்கு
 5. #..பன்றி காய்ச்சல்னு சொன்னலாவது கொஞ்சமாவது நம்பலாம்....... டோண்ட்வொர்ரி....”#
  ஆஹா ,நண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கணும் :)
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துன்பத்திலும் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறான் பாருங்கள் சிறந்த நண்பன்.

   நீக்கு
 6. வணக்கம்

  எல்லாஉரையாடலும் நன்றாக உள்ளது நகைச்சுவையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ஆல்! சூப்பர்! நகைச்சுவை!! நண்பரே! ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
 8. நகைக்க நல்லதொரு வாய்ப்பு ரசிக்கவைத்தது நகைச்சுவை.

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!